உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் தொடர்கிறது; இதுவரை 05 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் மேலும் இளைஞர் பலியானதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

குப்வாரா மாவட்டத்தில் பெண் மானபங்கம் செய்யப்பட்டதை கண்டித்து கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து காஷ்மீர் பள்ளதாக்கு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. நதுல்ஷா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமை நேற்று முற்றுகையிட்ட போராட்டகாரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் மோதல் வெடித்தது.

அப்போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆர்.எஸ்.குசேந்தர் என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளதையடுத்து காஷ்மீர் பள்ளதாக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

வன்முறை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள பாதுகாப்பு படையினர் பள்ளதாக்கு முழுவதும் இணையதள சேவையை துண்டித்துள்ளனர்.

அமைதியை சீர்குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் கும்பலின் சதிக்கு துணைபோகாமல் அமைதி காக்க வேண்டும் என காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது! மக்களை ஏமாற்றும் ஹக்கீம்

wpengine

வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமை! மரண தண்டனை டிரம்ப் கோரிக்கை

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் வவுனியாவில் ஒரு தொகுதி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

wpengine