பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து கொழும்பு அரசியலில் மும்முனை போட்டி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக, புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், எதிர்வரும் ஐந்தாம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இந்நிலையில், புதியக் கூட்டணியின் சின்னம் பற்றி அன்றைய தினமே அறிவிக்க கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவோம். இரவு விழுந்த குழிக்குள், பகலிலும் விழப் போவதில்லை.

மிகவும் பிரபலமான கட்சியை பிளவுபடுத்தி இல்லாமல் ஒழிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று, ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழு அமைத்துக் கொண்டிருப்பவர்களிடம் தான் வேண்டு​கோள் விடுப்பதாக” அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக, தேர்தல்களை இலக்கு வைத்து, புதிய கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் தெரிவித்திருந்தார்.

,இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து கொழும்பு அரசியலில் மும்முனை போட்டி தன்னை ஏற்பட்டுள்ள நிலையில், தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மைத்திரி,ரணில் அரசு ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை

wpengine

காலி முகத்திடலில் குப்பையான ஹரிஸ்,அலி,ஹாபீஸ்,தௌபீக்,முஷ்ரப்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor