Breaking
Sun. May 19th, 2024

(அஷ்ரப் .ஏ.சமத்)

கடந்த வாரம் வடக்கு முதல்வர் வடக்கில் இனவாதத்தை தூண்டுவதற்காக கூறிய கூற்று தெற்கின் இனவாதிகளை ஊசியேற்றுவதாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்கள்.

இரத்மலானை அத்திடிய பிரதேச விளயாட்டு சங்கங்களுக்கு விளையாட்டுப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும் இணைந்த எதிரணியும் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை கொண்டுள்ளார்களா எனும் சந்தேகம் இதனால் எழுகின்றது. நல்லிணக்கம் இருப்பின் நாட்டில் சுதந்திரம் இருக்கும். தற்பொழுது ஜனநாயகம், சட்டம், நீதி ஆகியவைகள் நியாயமாக செயற்படுகின்றன. இவ்வாறான நிலையில் விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கில் தீவரவாதத்தை விதைத்து இந்நாட்டில் மீண்டும் ஒரு சண்டையை ஏற்படுத்த முயற்சிப்பது இணைந்த எதிரணியினர் வழங்கிய கொந்தராத்தோ என எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில், வடக்கில் இனவாதத்தை தூண்டும்போது அது தெற்கு இனவாதிகளை ஊசியேற்றுவதாக அமைகின்றது. வாசுதேவ அவர்களும் விக்னேஸ்வரன் அவர்களும் உறவினர்களாக இருப்பதால் எமது சந்தேகம் மேலும் வலுப் பெறுகிறது. இவ்வாறான இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு மீண்டும் இந்நாட்டை இரத்தக் களரியாக்கி அவ்விரத்தக் களரியின் மீது அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியை போன்றே, அரசாட்சியை கைப்பற்றி களவெடுக்க, கொலை செய்ய, அனைவரையும் கடன்காரர்களாக்க மேற்கொள்ளப்படும் மோசடியொன்றா எனும் சந்தேகமும் தோன்றுகிறது.

அதேபோன்று, அவ்வாறான மோசடியொன்றாயிருந்தால் அதற்கு நாங்கள் கூறுவதெல்லாம் நீங்கள் எந்நிலையில் வந்தாலும் தேர்தல் ஒன்று நடைபெறாது. அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் வடக்கின் முதல்வருக்கு வீடு செல்ல நேரிடும். ஆதலால், இந்நாட்டில் பிறந்த நாமனைவரும் ஒரே நாட்டினர் என கருதி அனைவரும் தங்களது நாட்டிற்காக தோன்றக் கூடிய நிலைமையை ஏற்படுத்தி நாங்கள் இலங்கையர் எனும் மனநிலையயை மக்களிடத்தில் உருவாக்க வேண்டும். அவ்வாறின்றி மக்களை இனவாரியாகப் பிரித்து நாட்டை துண்டாடுவதற்கு எமது அரசு இடமளிக்காது.unnamed-6

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *