பிரதான செய்திகள்

சுற்றுப்பயணங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்!-சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்-

ஏப்ரல் விடுமுறை காலத்தின் போது, வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்

இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் இந்த தகவல்களை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் தங்கள் சிசிடிவி கேமராக்களை இயக்கவும், கொள்ளை சம்பவங்களைத் தடுக்க காட்சிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுக் கொண்டார்.

Related posts

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து, 4 பேர் பலி . !

Maash

நாட்டில் அரிசியின் விலை அதிகரித்துள்ளது! கிராம உத்தியோகத்தர்களுக்கு “டெப்” வழங்கிய ஜனாதிபதி

wpengine

வட்ஸ் அப்பில் விளையாடிய விளையாட்டு அதிகாரி

wpengine