Breaking
Sat. Apr 20th, 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 6 மணி முதல் ஊரடங்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக முல்லைத்தீவில் மக்கள் அதிகளவில் கூடுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது

குறிப்பாக பலசரக்கு கடைகள் ,மற்றும் மரக்கறி சந்தைகள் ,எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களிலே அதிகளவான மக்கள் ஒன்று கூடி இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது

குறிப்பாக பொலிசார், இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

குறிப்பாக வருகை தரும் மக்களுக்கிடையிலான இடைவெளிகளை ஏற்படுத்தி பல்வேறு சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக அவர்களுடைய கடமைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்ற போதும் மக்கள் கூட்டம் மிக அதிகமான அளவிலே வருகை தருவதால் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் வரை ஊரடங்கு உத்தரவு இருக்கின்ற நிலைமையில் அதற்கான பொருட்களை வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்துக்கொண்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு நிலை இருக்கின்ற போதும் தற்போதைய அரசாங்கத்தினால் அந்த உத்தரவு பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது.

என அறிவிக்கப்பட்டு இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க விமலநாதன் தெரிவித்தார்

அதோடு குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் நேற்றையதினம் அறிவிக்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் சமுர்த்தி வங்கியில் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் சமுர்த்தி வங்கியில் அதிகளவான மக்கள் கூடுகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கொண்டு சென்றதன் அடிப்படையில் குறித்த பணத்தை அவர்களுடைய வீடுகளில் கொண்டு சென்று வழங்குவதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *