கடந்த 31/03/2016 ஆம் திகதி சுடர்ஒளிப்பத்திரிகையில் எனது பெயரிலே அறிக்கை ஒன்று விடப்பட்டிருந்தது.
அந்த செய்தியானது கெளரவ பாராளமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்கள் 29/03/2016 ஆம் திகதியிலான பத்திரிகை செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
அந்தச்செய்திக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும்,யாரோ சில விசமிகள் இதனை திட்டமிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி பிரச்சினையை பூதாகரமாக்க முனைவதை இதன் மூலம் என்னால் உணரமுடிகிறது.
நான் கடந்த 27/03/2016 அன்றிலிருந்து 31/03/2016 வரையான காலப்பகுதியில் தனிப்பட்ட விஜமொன்றை இந்தியாவுக்கு மேற்கொண்டு திரும்புகின்ற போதே இந்தச்செய்தி எனது பார்வைக்கு கிடைத்தது.
கெளரவ பாரளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களுக்கு பத்திரிகைக்கூடாக மறுப்பு தெரிவிக்க வேண்டிய தேவை கடந்த நாட்களில் எனக்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களுக்கு அவரது பத்திரிகை செய்திக்கு முன்னரே தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளேன்.
அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நேரடியாக பதில் கொடுத்துள்ளேன். அதன் பிறகும் அவர் ஊடகங்களின் மூலம் அறிக்கை விட்டிருப்பது என்பதும், அதனைத்தொடர்ந்து எனது பெயரில் மறுப்பறிக்கை விடப்பட்டுள்ளது என்பதும் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கெளரவ சிறிநேசன் அவர்கள் இவ்வளவு தெளிவு பெற்ற பின்னும், ஏன் அவசரப்பட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டார் என்று எனக்கு தெரியவில்லை.
என பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்