உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சிறுவனை கொலை செய்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை – சீனாவில் சம்பவம்!

சீனாவின் ஹெனான் மாகாணம் ஜியான்சுவோ நகரில் உள்ள மழலையர் பாடசாலையில் வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னிடம் பயின்ற 25 மாணவர்களுக்கு விஷத்தன்மை வாய்ந்த சோடியம் நைட்ரைட் கலந்த உணவை கொடுத்துள்ளார்.

இதில் அந்த சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதனால் வான் யுன்னை பொலிஸார் கைது செய்தனர். 

இது குறித்த வழக்கில் அந்த நாட்டின் நீதிமன்றம் அவருக்கு 9 மாதம் சிறை தண்டனை வழங்க உத்தரவிட்டது.

இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுவன் சுமார் 10 மாதம் கழித்து உயிரிழந்தான். மேலும் வான் யுன் தனது கணவரையும் விஷம் வைத்து கொலை செய்தது பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து ,அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Related posts

மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் அசமந்தபோக்கு!முசலி கோட்டக்கல்வி பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை?

wpengine

சமூகங்களுக்கிடையே வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை

wpengine

நாளை 10வது உதான கம்மான ”தயாபுர” மக்களிடம்

wpengine