பிரதான செய்திகள்

சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது எனவும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஒருவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயற்பட்டால், அவர் அந்த பதவியில் இருக்க முடியாது எனக் கூறப்படுகிறது.

அவர் தானாக விலக வேண்டும் அல்லது குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் சதொச விற்பனை வளாகத்தில் மனித எலும்புகள்

wpengine

பாலியாற்று அரைக்கும் ஆலையினை பார்வையிட்ட பா.டெனிஸ்வரன்

wpengine

மோடியுடன் நானும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த

wpengine