பிரதான செய்திகள்

சற்றுமுன் கொழும்பில் சக்தி வாய்ந்த வெடி குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் சற்று முன் கொழும்பில் சக்தி வாய்ந்த வெடி குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிகுண்டானது, கொழும்பு கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலை அண்டியுள்ள பகுதியிலிருந்து படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட வெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருவதுடன், அந்த பகுதியில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் நாட்டில் மீட்கப்பட்ட குண்டுகளை விட, கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட குண்டானது மிகவும் சக்தி வாய்ந்தது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சக்தி வாய்ந்த குண்டானது சிலவேளைகளில் வெடித்திருந்தால் பாரியளவிலான சேதங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்பட்டு இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வடக்கு முஸ்லிம்களை அழிக்க ஹக்கீம் அமைச்சர் சம்மந்தன் உடன் கைகோர்ப்பு

wpengine

விசித்திரமான காதல் ஜோடி! பேஸ்புக் லைவ் மூலம் காதல் வெளிப்பாடு.

wpengine

பேஸ்புக் குற்றம் கைது செய்யும் பொலிஸ்

wpengine