பிரதான செய்திகள்

சம்பந்தன் ஐயா! அபாயா விடயத்தில் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்.

(எம்.ரீ. ஹைதர் அலி)
எங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன்.

“வடக்கு, கிழக்கு இணையவேண்டும் அதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்” ஐயா உங்கள் அரசியல் அனுபவம் வயது முதிர்ச்சி உங்கள் பக்குவம் இவை எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த அந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள் நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டிய நீங்களும் இனவாதிகளோடு கைகோர்த்து அநீதியின் பக்கம் சென்றுவிட்டீர்களே!!!

எங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன் நாட்டில் முஸ்லிம்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் உங்கள் இல்லத்திலும், பாராளுமன்றத்திலும் உங்களை சந்தித்து பலமுறை எங்கள் பிரச்சினையை உங்களிடம் சொன்னார்களே உலகம் அறியாதவங்க.

வடக்கு கிழக்கு பிரிந்திருக்கும்போதே ஓர் அடிப்படை நம்பிக்கை சார்ந்த விடயத்துக்கு நீதியான தீர்வு சொல்லமுடியாத நீங்களா வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு தீர்வுத்திட்டத்தில் பங்கு கொடுக்கப்போகிறீர்கள்? எங்களது சந்தேகத்தை நீங்கள் உறுதிப்படுத்திவிட்டீர்களே.

சிறுபான்மை சமூகங்களான நாங்கள் ஒற்றுமைப்பட்டு வாழவேண்டும் என்ற கனவுக்கு பல இனவாதிகள் கல்லைதூக்கிப்போடும்போது தடுக்கவேண்டிய நீங்கள் இப்படி தட்டிக்கொடுக்கிறீர்களே.

Related posts

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலக தொழிநுாட்ப உத்தியோகத்தர் விபத்தில் மரணம்

wpengine

ஐக்கிய மக்கள் சக்தியினர் எவரும் அரசாங்கத்துடன் இணைய ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்!-ரஞ்சித் மத்தும பண்டார-

Editor

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் எமது கட்சியில் இல்லை நாம் தூய்மையான அரசியலே செய்கின்றோம்!-எதிர்க்கட்சித் தலைவர்-

Editor