பிரதான செய்திகள்

சமூர்த்தி அபிமாணி சந்தை வவுனியாவில்

சமூர்த்தி அபிமானி 2017 மார்கழி விழா மாவட்ட மட்டத்திலான விற்பனைக் கண்காட்சி வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்று காலை 9 மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமட்ண விதானபத்திரனவின்  தலமையில் இடம்பெற்றது.

 

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.திரேஸ்குமார், உதவி அரசாங்க அதிபர் கே.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் க. உதயராசா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கே.பரந்தாமன் உட்பட  வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசாங்க அதிபர் நாடா வெட்டி விற்பனை கண்காட்சி நிலையத்தினை திறந்து வைத்ததுடன் விற்பனை நிலையங்களையும் பார்வையிட்டார்.

விற்பனை கண்காட்சி இன்றும் நாளையும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறுமென சமூர்த்தி வங்கியின் பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

பிளாஸ்டர்கள் உள்ளிட்ட அடிப்படை மருந்துப் பொருட்கள் கூட இல்லாத வைத்தியசாலைகள்.

Maash

ஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் :தவறு செய்கிறோம்

wpengine

தமிழரசுக் கட்சியின்; பாரம்பரிய நட்புக்கட்சி ஜக்கிய தேசிய கட்சி- சிவசக்தி ஆனந்தன்

wpengine