பிரதான செய்திகள்

சகவாழ்வு அமைச்சர் முகநூலில் இனவாதம் பேசுகின்றார்.

மனோ கணேசன் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரிதியில் அதுவும் சகவாழ்வு அமைச்சர் என்ற ரீதியில் செயற்படாமல், கடந்த ஒரு சில தினங்களாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து சில இனவாத பதிவுகளை முன்வைத்து வருகிறார்.

அவரின் கருத்துக்களுக்கான விளக்கத்தை கேட்டு பலர் பின்னூட்டங்கள் இட்டபோதும், ஒன்றுக்கும் பதிலளிக்காமல் ‘கள்ள’ மௌனம் காத்து வருகிறார்.
ஒரு தனி மனிதன் என்ற வகையில் அவருக்குள்ள கருத்து சுதந்திரத்தை எங்களால் தடுக்க முடியாது.

ஆனால் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் அதுவும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்த வேண்டிய அமைச்சு ஒன்றுக்கு பொறுப்பானவர் என்ற ரீதியிலும் அவருக்கு இனவாதத்தைக் கக்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கு எவ்வித தார்மீக உரிமையுமில்லை.
அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.

முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசவந்த மனோ அண்மைக்காலமாக இலங்கையில் இயங்க ஆரம்பித்திருக்கும் ஹிந்துத்வா சிவசேனா அமைப்பு விடயத்தில் கள்ள மௌனமே காத்து வருகிறார். இந்து அடிப்படைவாதத்தை சட்டைப்பைக்குள் அமுக்கி வைத்துக்கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சந்திக்கு இழுத்துள்ளார். சிங்கள அடிப்படைவாதத்தையும் அடக்கி வாசித்துள்ளார்.

வெளிநாட்டு புலனாய்வு ‘ஏஜன்ட்களின்’ நிகழ்ச்சி நிரல்கள் எமக்கு மிகவும் பரிச்சயமானது.
எங்களிடம் இந்த வெளிநாட்டு ‘எஜன்டா’ எடுபடாது என்பதையும் தமிழ் முஸ்லிம் மக்களை மோதவிட்டு சீண்டிப்பார்க்கும் உங்களது இந்த கபடத்தனம் வெகு விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்பதையும் உறுதியாக சொல்லி வைக்க விரும்புகிறோம்.

Related posts

இறைச்சி மாடுகள் விற்க தடை: மோடி அரசுக்கு எதிராக ஒன்றுசேரும் தமிழக கட்சிகள்

wpengine

மார்ச்சியில் மாகாண சபை தேர்தல்

wpengine

100 வயதினை தாண்டியோருக்கு 5000ரூபா

wpengine