பிரதான செய்திகள்

கொரோனா தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 64 வயதுடையவர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராகும். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இலங்கையில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் உயரிழந்தார்.


இதேவேளை இலங்கையில் இதுவரை 122 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் மைத்திரி

wpengine

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டம்! ஜனாதிபதி நாளை அமெரிக்கா

wpengine

உயர்தர மாணவன் ஹொலிகொப்டர் தயாரித்து சாதனை

wpengine