பிரதான செய்திகள்

குழாய்க்கிணறு ஒன்றை அமைத்து தருவதாக மஸ்தான் (பா.உ) உறுதி

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிஹிடியா பாம் பழைய குடியேற்ற கிராம மக்கள் இதுவரை காலமும் குடிநீருக்காக ஆற்று நீரை பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களுக்கான குடி நீர் வசதியினை செய்து தருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

குறித்த கிராம கிராம மக்களால் பல அரசியல் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாரும் அங்கு செல்லாத நிலையில் அண்மையில் அப்பகுதிக்கு  நேரடியாக விஜயம் செய்த அவர் மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார்
அத்துடன் தாம் மல்வத்து ஓயா ஆற்றை அண்டியவாறாக பல தசாப்தங்களுக்கும்  மேலாக குடியிருப்பதாகவும் இதுவரை காலமும் தாம் குடிப்பதற்கு ஆற்று நீரையே பயன்படுத்துவதாகவும்   அக்கிராம மக்கள்  தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த கிராம மக்களுக்கு முதற்கட்டமாக  தாம் ஒரு மாத காலத்துக்குள் குழாய்க்கிணறு ஒன்றை தனது சொந்த செலவில் அமைத்து தருவதாக மஸ்தான் எம்.பி தெரிவித்தார்.
மேலும் தாம் அரசியலுக்கு வரும் முன்னரே இவ்வாறான உதவிகளை மக்களுக்கு செய்து வருவதாகவும் தமது விஸ்தரிக்கப்பட்ட சமூக சேவையினை மக்களுக்கு வழங்கவே தான் அரசியலுக்கு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.b8cfc235-a25a-4115-8591-8f55f0b3ca80
ஊடகப்பிரிவு 

Related posts

வித்தியா எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்? சாட்சியம்

wpengine

கல்வி தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் உடன்படிக்கை

wpengine

கட்டிய கணவனை கொல்ல பேஸ்புக் காதலனுடன் திட்டம் தீட்டிய மனைவி

wpengine