Breaking
Thu. May 9th, 2024

திரைப்பட விழாவில் நடிகை ஹிஜாப் அணியாமல் இருப்பது போன்ற விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டமையின் காரணமாக, திரைப்பட விழாவை தடை செய்வதற்கு ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

“சட்டத்தை மீறிய ஒரு சுவரொட்டியில் ஹிஜாப் இல்லாத பெண்ணின் படம் பயன்படுத்தப்பட்டதை அடுத்து, கலாசார அமைச்சர் தனிப்பட்ட முறையில் ISFA  திரைப்பட விழாவின் 13 ஆவது பதிப்பைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார்” என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த திரைப்பட விழாவுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய குறும்பட சங்கம் (ISFA) அதன் வரவிருக்கும் குறும்பட விழாவிற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டரில் 1982 ஆம் ஆண்டு வெளியான தி டெத் ஆஃப் யாஸ்ட்கர்ட் திரைப்படத்தில் நடிகை சூசன் தஸ்லிமி காணப்படுகிறார். இந்த விழா செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது.

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்து ஈரானியப் பெண்களுக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், 22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு தொடங்கிய ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து பெண்கள் ஆடை தொடர்பான விதிகளை மீறியுள்ளனர்.
 
மெஹ்சா அமினி ஆடை விதிமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த அவர், பின் கொல்லப்பட்டதை அடுத்து போராட்டம் வெடித்தது. முன்னதாக ஜூலை மாதம், அதிகரித்து வரும் பெண்களின் சட்டத்தை மீறுவதைப் பிடிக்க ரோந்துப்பணி மீண்டும் தொடங்கப்பட்டதாக காவல்துறை கூறியது.

பிரபல ஈரானிய நடிகை அப்சனே பயேகனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “அஃப்சானே பெய்கனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஐந்தாண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார், ஹிஜாப் அணியத் தவறியதற்காகவும், ஹிஜாப் சட்டத்தைப் பின்பற்றாததற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

A B

By A B

Related Post