பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வின்போது கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் திட்டிப் பேசியமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி மட்டக்களப்பு நகரில் இன்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமாகி காந்தி பூங்காவுக்கு முன்பாகச் சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகச் சென்று முடிவடைந்துள்ளது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கடற்படை அதிகாரியை பேசியதாகக் கூறப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இரண்டு கட்சிகளும் நாட்டை முன்னேற்றவில்லை திஸாநாயக்க

wpengine

விவசாயிகளுக்கு சந்தோஷசமான செய்தி! நிவாரண அட்டை

wpengine

பசுமை விவசாயத்துக்கான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை-ஜனாதிபதி

wpengine