Breaking
Tue. Apr 23rd, 2024
கிளிநொச்சி மாவட்டத்தின் அநேக பிரதேசங்களில் மணல் கொள்ளையர்களால் தொடர்ச்சியாக மணல் கொள்ளை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் அரச அதிகாரிகளுக்கும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிச்சயமாக மணல் கொள்ளையர்களை கைது செய்வோம் என பொலிசார்  வாக்குறுதி அளித்திருந்தனர்.

எனினும் தற்சமயம் 06 மாதங்களாக கிளி திருவையாற்றில் உள்ள வில்சன் வீதியின் நான்காம், ஜந்தாம் , ஆறாம் ஒழுங்கைகளுக்குப்பின்னால் அமைந்துள்ள பொது மக்களது விவசாய நிலங்களே மணல் கொள்ளையர்களால் மண் கொள்ளைக்காக அபகரிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பொதுமக்கள் 119 அவசர பொலிசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் பொலிசாரினால் கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை. கடமைக்காக வருகின்ற பொலிசார் கொள்ளையர்களிடம் பணத்தைப்பெற்று பாராமுகமாக செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரங்களில் மணல் ஏற்றப்பட்டு பின்னர் டிப்பர் வாகனங்களினூடாக யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *