பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண சபை முன்னால் உறுப்பினர்களுக்கு புதிய பிரச்சினை

கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டதால் மாகாண சபை உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளும் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் கிழக்கு மாகாண சபையின் 5 வருட கால எல்லை நிறைவுக்கு வந்தது. இதையடுத்தே மாகாண சபை உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளும் இல்லாமல் போயுள்ளன.

5 வருடங்களுக்கு மேலான உறுப்புரிமை காலத்தைப் பூர்த்திசெய்து தீர்வை வரியற்ற வாகனங்களைப் பெற்றவர்கள் மாகாண சபையின் காலம் நிறைவடைந்துள்ளமையால் அதனை மீண்டும் அரசிடம் ஒப்படைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் குறித்த தீர்வை வரியுடனான வாகனத்தைப் பெற்றவர்கள் சிறிய தொகையினர் மாத்திரமே உள்ளனர்.

ஆனாலும் தற்போது இவர்கள் இந்த வரப்பிரசாதத்தைப் பெற்று 2 வருடங்களே ஆகியுள்ளதாகவும், மிகுதியுள்ள மூன்று வருடங்களுக்கான தீர்வை வரியுடனான வாகன அனுமதிப்பத்திரத்துக்கு அனுமதி வழங்குமாறும் கோரி வருகின்றனர்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சந்ததாஸ கலப்பதி தெரிவிக்கையில்,

“எமக்கான சிறப்புரிமைகள் தற்போது இல்லாமல் போயுள்ளன.
அதனை நீடிப்பதற்காகவே எங்களது கோரிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு மாகாண சபையின் தலைவர் ஊடாக கடிதம் மூலம் அனுப்பிவைத்துள்ளோம்”

Related posts

ஆனமடுவ நோக்கி நவவி விஜயம்! பிரதிப் பொலிஸ் மா அதிபரிடன் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

wpengine

எரிபொருள் விற்பனை நடவடிக்கை தொடர்பில் சினோபெக் நிறுவன அதிகாரிகள் இலங்கை விஜயம்!

Editor

மதுஷ்வின் 100கோடி மற்றும் வாகனம் எங்கே?

wpengine