பிரதான செய்திகள்

காலி முகத்திடல் போராட்ட வீரர்கள் கஞ்சா செடி,போதை மாத்திரை பாவனை

கொழும்பு – காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து கஞ்சா செடிகள் மற்றும் பெருமளவான சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பெருமளவிலான மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவை போதை மாத்திரைகளாக இருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காலிமுகத்திடல் பகுதியில் இன்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து அப்பகுதியில் அகற்றப்படாமல் எஞ்சியிருந்த கூடாரங்கள் அகற்றும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே இவ்வாறு கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.    

Related posts

15 ஆம் திகதி கூடும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம்

wpengine

மியன்மாரின் காட்டுமீராண்டி தனத்திற்கு எதிராக ஒட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

wpengine

தண்ணீர் எடுக்க சென்ற 15வயது மாணவி மரணம்

wpengine