Breaking
Sat. Apr 27th, 2024

(அபூ செய்னப்)

தேசியத்தில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக உரத்துப் பேசுகின்றோம், முஸ்லிம்களின் உரிமைக்காக எங்கள் இந்த அரசியல் இயக்கம் தொடர்ந்தும் போராடும்,அந்தப் போராட்டம் எமது சமூகத்தின் நன்மைக்காக மட்டுமே நிகழும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் கூறினார்.

திருகோணமலை மாவட்டம் முள்ளிப்பொத்தானை ஹிஜ்ரா மத்திய கல்லூரியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது பிரதி அமைச்சர் மேற்கொண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்

இந்த மாவட்டத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தைரியமாக பேசுவதற்கு ஒரு நல்ல தலைமைத்துவத்தை நாம் தந்துள்ளோம். அப்துல்லாஹ் மஃரூப் அவர்கள் திறமையான மனிதர்,நேர்மையானர், கட்சி பேதங்களை தாண்டி செயலாற்றுகின்றவர்.அவரின் மூலம் இந்த மாவட்டத்து மக்களின் கல்விப்பிரச்சினைகள்,காணிப்பிரச்சினைகள்,உரிமைப்பிரச்சினைகள் தீர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.அப்துல்லாஹ் மஹ்ரூப் பாராளமன்றத்தில் இந்த மாவட்டத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உறுதியுடன் பேசுகின்ற ஒருவர்,அவரை நீங்கள் பலப்படுத்த வேண்டிய கடமை உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.e27789bd-cefa-478e-93f0-c45c08e23aa9

எமது தலைவர் அமைச்சர் கெளரவ ரிசாத் பதியுதீன் அவர்களை நாம் பலப்படுத்த வேண்டும்,அவர் நமது சமூகத்திற்காக தியாகத்துடன் செயற்படுகின்றவர்.அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை இனவாதிகள் முன்வைத்து அவரது செயற்பாட்டினை முடக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இன்ஷா அல்லாஹ் அது இறைவனால் முறியடிக்கப்படும். மக்களை நேசிக்கின்ற ஒரு நல்ல தலைவரை நாம் பெற்றுள்ளோம்.

எங்கள் கோரிக்கைகள் எல்லாமே எமது சமூகத்தின் நன்மையை கருத்திற்கொண்டே முன்வைக்கப்பட்டுள்ளது.இந்தப்பிரதேசத்தில் மட்டுமல்லாது எல்லா பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு பிரசுரங்கள் இருக்கிறது. அவைகளை நல்லாட்சி அரசுக்கு நாம் தெரிவித்திருக்கிறோம். அது மட்டுமல்ல அவற்றுக்கான தீர்வுகள் கிடைக்கும் என நம்புகிறோம்.என அவர் கூறினார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *