பிரதான செய்திகள்

காலி முகத்திடலில் மஹிந்தவுக்காக ஆசனம் ஒதுக்கிய காலி குழு

பிரதமர் மகிந்த ராஜபக்சவோடு கலந்துரையாடுவதற்காக காலி முகத்திடலில் உள்ள கோட்டாகோகமவில் பிரத்தியேக இடமொன்றை போராட்டக்காரர்கள் அமைத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு பெற்றுத்தர கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் போராட்டக்காரர்களால் புதிய கிராமமொன்று ‘கோட்டாகோகம’ என்ற பெயருடன் உருவாக்கப்பட்டது.

இப்பகுதியில் இப்போது பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவென பிரத்தியேக இடமொன்றை உருவாக்கி வைத்துள்ளதுடன், இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

புத்தள அரசியல்வாதிகளே! றமழான் மாதத்தில் தொடடும் மின் வெட்டு பின்னனி என்ன?

wpengine

ஆர்ப்பாட்டம்! ரோஹித அபேகுணவர்தன வைத்தியசாலையில்

wpengine

வவுனியா போக்குவரத்துக்கு இடையூர் மக்கள் குற்றம்

wpengine