செய்திகள்பிரதான செய்திகள்

கார் மாட்டுடன் மோதியதில் அட்டாளைச்ச்சேனையை சேர்ந்த குழந்தை பலி .

அக்கரைப்பற்று – பொத்துவில் A-04 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

அக்கரைப்பற்று – பொத்துவில் A-04 பிரதான வீதியில் தாண்டியடி பகுதியில் அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற கார் ஒன்று, வீதியில் சென்ற மாடு மீது மோதி நேற்று (23) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து நடந்த நேரத்தில் காரில் சாரதி, அவரது மனைவி மற்றும் குழந்தையும் இருந்துள்ளதுடன், காயமடைந்த குழந்தை திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்தது.

அட்டாளைச்சேனை 05 ஐ வசிப்பிடமாகக் கொண்ட 9 மாதக் குழந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

விரைவில் மலே­சி­யா­வுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ராக முஸம்மில்

wpengine

சதாம் ஹுஸைனின் நினைவுச் சின்னங்களை பார்வையிட்ட பிரதி அமைச்சர்

wpengine

எம்.எச்.எம்.அஷ்ரப்க்கு பிறகு இறக்காகம் மக்களுக்கு சேவை செய்ய அமைச்சர் றிஷாட்

wpengine