பிரதான செய்திகள்

கலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.

இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது அரசியல்வாதி என்ற பெறுமையை அவர் இதன் மூலம் பெற்றுக்கொண்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை Metropolitan College இன் பட்டமளிப்பு விழா கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது இராஜாங்க அமைச்சருக்கான கலாநிதி பட்டம் மலேசியாவின் லிங்கன் பல்கலைக்கழக துணை அதிபர் Dr. Hjh. Bibi Florina Binti Abdullah  மூலம் வழங்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் Metropolitan College ஊடாக  Alliance International University-Zambia பல்கலைக்கழகத்தினால் இப்பட்டத்தை பெறுவதற்கு ‘ஆயுத மோதல்களில் மத்தியஸ்தம்’ எனும் தலைப்பில் 292 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையினை சமர்ப்பித்திருந்தார்.

பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பந்தனின் “கபடத்தனத்தை” மஹிந்தவிடம் காட்ட நினைக்கின்றார்

wpengine

ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி இன்று

wpengine

ஹிஜாப் அணியாத பெண்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க ஈரான் அரசு தீர்மானம்!

Editor