பிரதான செய்திகள்

கரும்பு உற்பத்தியாளர் பிரச்சினை! றிசாத்தைப் பாராட்டினார் ஹக்கீம்

அம்பாறை மாவட்டக் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் தான் நன்றி கோருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் திருத்தச்சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டக் கரும்புத் தொழிலாளர்கள்  தமது தொழிலை மேற்கொள்வதற்கு கல்லோயா பிளான்டேஷன் கம்பனியினர் இடைஞ்சலாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் கரும்புச் செய்கையாளர்கள் மாற்று வழியை மேற்கொள்ள வேண்டி நேரிடும் என்று தெரிவித்த அமைச்சர் ஹக்கீம்,   இவர்களின் பிரச்சினை தொடர்பில் நாங்கள் பல தடவைகள் அமைச்சர் ரவி கருணாநாயக்காவுடன் பேச்சு நடத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

China – Sri Lanka Collaborative Project Workshop Reviewing possible causes Kidney Disease

wpengine

காட்டிக்கொடுக்கின்ற சுயநலம் என்னிடமில்லை! அமீர் அலியின் கரங்களை பலப்படுத்துவோம்!

wpengine

ஞானசார தேரரை விடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க பணி எமக்கு வழங்கப்பட்டுள்ளது.

wpengine