பிரதான செய்திகள்

கடற்கரையோர பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மன்னாரில்

இலங்கை இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக கடற்கரையோர பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அந்த வகையில் குறித்த தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோரப் பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் 54ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிகேடியர் சுபசன வெளிகல தலைமையில் மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் இன்று காலை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் 220 கிலோமீற்றர் கடற்கரை பிரதேசம் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், இதன்போது கடற்கரை பகுதியில் காணப்பட்ட சகல விதமான கழிவுப்பொருட்களும் அகற்றப்பட்டுள்ளன.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு குறித்த பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடுபூராவும் 43,273 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன என அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Maash

அன்புள்ள அதாவுல்லாஹ் அவர்களுக்கு ஒர் மடல்

wpengine

ஆலய அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கிய வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன்

wpengine