பிரதான செய்திகள்

எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப் பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.  

கால்நடை தீவனம் கிடைக்காததால் முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கால்நடை தீவனம் விரைவில் வழங்கப்படாவிட்டால்  தட்டுப்பாட்டு நிலையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் கோழி இறைச்சிக்கு அதிக கிராக்கி இருந்ததால் விலையும் வேகமாக உயர்ந்தது. எவ்வாறாயினும், தேவை குறைவடைந்ததன் காரணமாக கோழி மற்றும் முட்டையின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Related posts

நோன்பு 29ல் YLS மன நோயாளியாது ஏன்?

wpengine

2000 கிராம சேவையாளர்கள் பதவி வெற்றிடம்

wpengine

ஆசாத் சாலிக்கு எதிராக CID விசாரணை குழு

wpengine