Breaking
Sat. Apr 27th, 2024
SAMSUNG CSC
(அஷ்ரப் ஏ சமத்)
நியுசிலாந்து பிரதம மந்திரி  ஜோன் கீ  இன்று(24) ஆம் திகதி பி.பகல் 03.00 மணிக்கு குருநாகலில்  பண்னல பிரதேசத்தில் பொன்ரோ அண்கா் பால் மா கம்பணியினால் வருடாந்தம் உள்ளுர் பாற்பண்னையாளா்களை பயிற்சி அளிக்கும் நிலையத்தினை திறந்து வைத்தாா்.

இங்கு உரையாற்றிய நியுசிலாந்து பிரதம மந்திரி –

எங்கள் நாட்டில் உள்ள ஒரு பசுமாடு ஒரு நாளைக்கு 8 லீட்டா் பால் கறக்கின்றது. ஆனால் உங்கள் நாட்டில் உள்ள பசு 4 லீட்டா் பால் கறக்கின்றது.SAMSUNG CSC

நியுலாந்தும் அவுஸ்திரேலியாவும் கிரிக்ட் விளையாடும்போது நீங்கள் நியுலாந்தை ஆதரித்தீா்கள் அதேபோன்று நாங்கள் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கிறிகட் விளையாட்டின் போது இலங்கை அணியை ஆதரிப்போம்.  உங்களது நாட்டில்  சிறந்த றக்கா் விளையாட்டு வீரா்கள் உள்ளனா். இலங்கை சிறந்ததொரு அழகான நாடு  இலங்கைக்கு எனது 2வது விஜயம் மாகும் எனது நாட்டில் ்இருந்து பசுக்களை தருவிப்போம் ஆனால் இன்று நீங்கள் பெரிதும் எடையுள்ள யாணை ஒன்றை பரிசாக தந்துள்ளீர்கள்.

SAMSUNG CSC
SAMSUNG CSC
ஆனால் உங்கள் பசுக்கள் எடை குறைவு. உலகில் பொன்ரேரா எனும் கூட்டுரவு பண்ணையாளா் உற்பத்தி 38 வருடமாக இலங்கையில் சிறந்து உள்ளுர் கிராமிய அபிவிருத்தி உற்பத்திக்கு கைகொடுக்கின்றது.  என நியுசிலாந்து பிரதம மந்திரி  அங்கு உரையாற்றினாா்
அமைச்சா்கள் ஹரிசன், ஜயவிக்கிரம பெரேரா முதலமைச்சா் ஆளுனா் பியசீலி ஆகியோறும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
பொன்டேரா அன்கா் பால் செயல் முறை பால் பண்னை இலங்கையில் பால் உற்பத்தித் துறையை வளா்க்கும் முகமாக முன்னோடி தனியாா் நிறுவனம் முதலீடு செய்து117 மில்லியன் ருபா செலவில் நியுசிலாந்து பிரதமரினால்  திறந்து வைக்கப்பட்டது. 38 வருடமாக இலங்கையில் இயங்கி வரும் டெய்ரி கோப்ரேடின் கடந்த இரண்டு வருடங்களுக்கு மட்டும் உள்நாட்டு பால் உற்பத்தியின் அபிவிருத்திக்காக 380 மில்லியன் ருபாவை முதலீடு செய்துள்ளது. மேலும் பால் சேகரிப்பை அதிகரித்து வருகின்றது. பாலின் தரத்தை மேம்படுத்தி  பால் பண்னையாளா்களின் வருமானத்தை கூட்டுவதற்காக நடவடிக்கை தொடா்ந்தும்  முன்னெடுத்து வருகின்றது.
இலங்கையி்ல் 2000 பால் விநியோகம் செய்ய மேலதிகமாக 2000 பண்னையாளருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 750 பேர் தொழிற்சாலையில் தொழிலாற்றுகின்றனா். தலா ஒரு நாளைக்கு 30ஆயிரம்  போ் பால் உற்பத்தியில்  வருமானம் பெறுகின்றனா்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *