பிரதான செய்திகள்

எதற்கு பொலிஸ் தினம்! சகீப் சுலைமான் கொலை தொடர்பில் பிரதமர்

பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதுள்ள நிலையில் பொலிஸ் தினம் அனுஷ்டிப்பதில் பயனில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட அமைச்சர்கள் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் முழுமையான பாதுகாப்புக்கு பொலிஸ் திணைக்களமே பொறுப்பு. நாட்டு மக்கள் சந்தேகம், அச்சம் இன்றி செயற்படும் சூழலை உருவாக்குவது அவர்களது பணியாகும் எனவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

பம்பலப்பிட்டிய வர்த்தகர் சகீப் சுலைமான் கொலை தொடர்பிலான விசாரணைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில் பொலிஸ் தின நிகழ்வைக் கொண்டாடுவதில் பயனில்லை.

குற்றத்தடுப்பு போன்று போதை ஒழிப்பு தொடர்பிலும் புதிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு, பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் அலரி மாளிகைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்

Related posts

கண்டி,அம்பாறை மீதான தாக்குதல் ஐ.நா.வில் ஆவண திறைப்படம்

wpengine

பொதுத்தேர்தலை நடத்த எடுத்த தீர்மானத்தின் ஊடாகவே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது.

wpengine

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய

wpengine