Breaking
Thu. Apr 25th, 2024

நாட்டுக்காக பயமின்றி தீர்வு தீர்மானங்கள் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களுக்காக அரசியலமைப்பினுள் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கட்சியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் காரணமாக தீர்வு தீர்மானம் எடுப்பதற்கு அச்சத்தில் இருந்த அரச ஊழியர்களுக்கு இல்லாமல் போன அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (12) காலை மஹரகம நகரத்தில் இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர், அரச ஊழியர்களின் நலன் குறித்து எங்கள் அரசாங்கம் தான் அனைத்து சந்தர்ப்பத்திலும் செயற்பட்டது. 1977ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை காணப்பட்ட அனைத்து அரசாங்கங்களும் அரச துறையை பலவீனப்படுத்தியுள்ளது. அரச பிரிவிற்கு சொந்தமான நிறுவனங்கள், தேசிய வளங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டது. அரச ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் வீதிக்கு தள்ளப்பட்டனர். 1983 ஆம் ஆண்டு ஜுலை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட 40000 பேர் ஒரே இரவில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். சில பணி பகிஷ்கரிப்பாளர்கள் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். அதேபோன்று கடந்த அரசாங்கத்தினர் அரச ஊழியர்களை கீழ் தரமாக நடத்தினார்கள்.

இந்த நாட்டில் 2005 ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு அரச பிரிவு மீது நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்த பின்னரே அரச துறை வலுவடைய ஆரம்பித்தது. 2005 ஆம் ஆண்டின் பின்னர் அரச வளங்களை தனியார் பிரிவிற்கு விற்பனை செய்ய மாட்டோம் வாக்குறுதியளித்து அரச துறையை ஸ்திரத்தன்மையாக்குவதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டோம். நாங்கள் அரச ஊழியர்களை காப்பாற்றியது மாத்திமிரன்றி அரச சேவையை விரிவு படுத்தினோம். 7 லட்சமாக இருந்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 15 லட்சமாக இரட்டிப்பாக்கினோம். நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது சுகாதார பிரிவில் 7000 தாதிமார்கள் இருந்தார்கள். எங்கள் ஆட்சி காலம் நிறைவடையும் போது நாங்கள் அதனை 15000 வரை அதிகரித்தோம். நாங்கள் அரச துறையை வலுப்படுத்தவில்லை என்றால் இவ்வாறான கொரோனா தொற்று ஏற்படும் போது என்ன நடந்திருக்கும்? இதனால் தான் இன்று கொரோனா வைரஸ் பரவலை இந்த முறையில் தீர்க்க முடிந்தது.

நல்லாட்சி அரசாங்கம் அரச ஊழியர்கள் குறித்து சந்தேகத்தில் தான் பார்த்தது. அதிகாரத்திற்கு வந்தவுடன் அரசாங்கத்தின் பிரதான அரச அதிகாரியான ஜனாதிபதி செயலாளரை பிடித்து சிறைக்கு அனுப்பினார்கள். அதேபோன்று அனூஷ பெல்பிடவையும் சிறையில் அடைத்தார்கள். மேலும் ஆயிரக்கணக்காக அரச அதிகாரிகளை குற்ற விசாரணை பிரிவிற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு தொல்லை கொடுத்தார்கள். அதனால் நல்லாட்சி அரசாங்கத்தில் அரச அதிகாரிகள் வேலை செய்யவில்லை. தீர்மானங்கள் எடுக்கவில்லை. இந்த நிலைமையை மாற்ற வேண்டும். எந்த ஒரு நடவடிக்கையும் நல்ல நம்பிக்கையுடன் செய்வதென்றால் அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ள முடியாத அரசியலமைப்பினுள் அரச ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம். அது மாத்திரமின்றி கடந்த அரசாங்கத்தில் நீதியரசர்கள் முதல் அனைவரினதும் கௌரவம் மிகவும் தாழ்த்தப்பட்டது. அந்த அரசாங்கத்தில் முன்னாள் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், நீதியரசர்களுக்கு எந்தளவு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதென்பது கடந்த காலங்களில் வெளியாகிய குரல் பதிவுகளில் தெளிவாகியுள்ளது. இது தான் அரச பிரிவிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையாகும்.

30 வருடங்கள் முழுவதும் இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் மாற்றம் செய்து விடுதலை புலிகளை அழித்து நாட்டிற்கு சமாதானத்தை கொண்டு வரும் செயற்பாட்டில் அரச ஊழியர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புகளுக்கு மதிப்பளிக்கின்றேன். இலங்கையில் அரச சேவை இல்லை என்றால் உலகம் முழுவதும் தீவிர தொற்றாக பரவும் கொரோனா தொற்றினை மிக குறுகிய காலத்தில் எங்களால் கட்டுப்படுத்தியிருக்க முடியாது. நாங்கள் அரச பிரிவிற்கு வழங்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்குவோம். ஐக்கிய தேசிய கட்சியினால் கைவிடப்பட்டிருந்த பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் மீண்டும் ஆரம்பித்தோம். அதன் முதலாவது கட்டமாக நான் ஜனாதிபதியாக இருந்த போது பட்டதாரிகளுக்கு தொழில் நியமனங்களை வழங்கினேன். அதேபோன்ற வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்ந்து முன்னெடுத்து அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம் என்பதனை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு முதன்மையிடம் வழங்கி அரச துறையில் ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் இதுவரையிலும் ஆரம்பித்துள்ளோம்.

தேர்தலின் பின்னர் நாங்கள் ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய சமூக இடைவெளியை கடைபிடித்து நீங்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். உங்களின் பாதுகாப்பு குறித்து சிந்தித்து நாங்கள் பல கூட்டங்களை இரத்து செய்துள்ளோம். பொது மக்கள் என்ற ரீதியில் நாங்கள் பாதுகாப்பாக இருந்தால் முழு சமுதாயத்தையும் பாதுகாக்க முடியும்´ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இம்முறை பொது தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான காந்தி கொடிகார, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார உட்பட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *