பிரதான செய்திகள்

உள்ளாடைகளை அணியாத காரணத்தினால் யாரும் மரணிக்கப் போவதில்லை

இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியாத காரணத்தினால் யாரும் மரணிக்கப் போவதில்லை என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், கோவிட் தொற்று ஏற்பட்டால் மரணிக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை காலமும் உள்ளாடைகளைக் கூட இறக்குமதி செய்து அணிவதை இட்டு நாம் வெட்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அதனைவிடவும் ஆடைகள் இன்றி இருப்பது மேலானது என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.   

Related posts

வடமாகாண எல்லைகளை மூடுங்கள்! தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்

wpengine

யாழ்நகரில் இரு உணவகங்கள் நீதிமன்றால் சீல் வைப்பு!

Editor

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor