Breaking
Thu. May 9th, 2024

சௌபாக்கியா 3 ஆம் கட்ட வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நிகழ்வு இன்றைய தினம் (23.09.2021) மன்னார் நகர பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு
M.பிரதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய மாவட்ட செயலாளர் அவர்கள் கலந்து கொண்டார்.


“வருமானத்தை அதிகரித்து, செலவீனத்தை குறைத்து, சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்”என்ற தொனிப்பொருளில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு I.அலியார்
அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதோடு, இத்திட்டம் தொடர்பான பூரண விளக்கமும் அவர்களினால் அளிக்கப்பட்டது.


√” வீட்டு லொத்தர்.”
√” சமுர்த்தி பயனாளிகளுக்கு 200,000 ரூபா பெறுமதியான வீடு திருத்தம்.”
√” சமுர்த்தி ” நிவச”600,000 ரூபா பெறுமதியான வீடு நிர்மாணித்தல்.”
√” அபிவிருத்தி கடன் வழங்கல்.”
ஆகிய சமுர்த்தி திட்டங்களுக்கான நிதிகளும்,

  • சௌபாக்கியா ஆடு வளர்ப்பு.
  • சௌபாக்கியா நண்டு வளர்ப்பு.
    ஆகிய உற்பத்தி கிராமங்களுக்கான ( சங்க)
    பதிவு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
  • மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக அலுவலர், தலைமை முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், மாவட்ட செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், மூன்று சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *