(அஷ்ரப் ஏ சமத்)
முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் சி்ங்கள மொழி மூலம் எழுதிய நுாலின் தமிழ் மொழிபெயா்ப்பு ”இதயம் பேசுகிறது” வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (30)ஆம் திகதி பேருவளை மருதானை பாசியத்துல் நஹ்மியா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதித்தியாக கல்வி அமைச்சா் அகிலவிராஜ் காரியவாசம் கலந்து கொண்டு நுாலின் முதற்பிரதியை பெற்றுக் கொண்டாா். 

அத்துடன் கொடகே வெளியீட்டாா்ளாா் கௌரவிக்கப்பட்டாா். பேராசிரியா் ஹூசைன் இஸ்மாயில் ஜாமியா நளீமியா பிரதிப் பணிப்பாளா் அஷ்ஷேக் அகாா் முஹம்மத், முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன், பலஸ்தீன் துாதுவா், பிரதியமைச்சா் அஜித், மாகாண கல்வி அமைச்சா் பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனா்.
