பிரதான செய்திகள்

இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்குச் சட்டம்

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


இந்தப் காலப்பகுதிகளில் சில திணைக்களின் செயற்பாடுகளை அத்தியவாசிய சேவையாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.


ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இயன்றவரை வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்குமாறு அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


சுகாதார துறை , பாதுகாப்பு துறை மற்றும் துறைமுகம் போன்ற அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தங்கள் திணைக்களங்களின் அடையாள அட்டையை காண்பித்து பணிகளுக்கு செல்ல முடியும்.
பொதுமக்கள் அவசரத்தின் போது வைத்தியசாலை மற்றும் பார்மசிகளுக்கும் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


வெளிநாடு செல்பவர்கள் தங்களது கடவுச்சீட்டை காண்பித்து கட்டுநாயக்க விமான நிலையம் செல்ல முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

அமீர் அலி தலைமையில் ஐ.தே.க.மனு தாக்கல்

wpengine

மீண்டும் உச்சம்தொட்ட முட்டை விலை ..!

Maash

நீர்கொழும்பில் பெருந்தொகை சட்டவிரோத மாத்திரைகளுடன் மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது .

Maash