பிரதான செய்திகள்

இனவாதம் பேசும் சிறீதரனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் கிளிநொச்சியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறித்த போராட்டத்தை மு.சந்திரகுமார் முன்னெடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் வலுக்கட்டாயமாக போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றை போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்,

பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியானவர் இவ்வாறு ஒரு சமூக மக்களை தரம்தாழ்த்திப் பேசுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இவ்வாறு ஏற்றத்தாழ்வாக சமூகத்தைப் பார்க்கும் ஒருவர், மக்களை சமத்துவமாக நடத்துவார் என யாரும் எதிர்பார்க்க முடியாது என்றும், எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் சமூக நீதியையும் விடுதலையையும் விரும்புவோர் அனைவரும் இந்த நீதியற்ற செயலைக் கண்டிப்பதோடு, இதற்குத் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத தாக்குதல்

wpengine

அதிகாரசபையின்  பணிப்பாளராக இல்ஹாம் மரைக்கார்  நியமனம்.

wpengine

ஜனாதிபதியினால் பௌத்த மறுமலர்ச்சி நிதியம் உருவாக்க முயற்சி

wpengine