பிரதான செய்திகள்

இடைக்கால நிதி 96மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்

அடுத்த ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை 96 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டது.

அதற்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் பதிவாகின.

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன அந்த அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஜேவிபி எதிராக வாக்களித்துள்ளது.

வாக்களிப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் கலந்துக் கொள்ளவில்லை.

எதிர்வரும் முதல் நான்கு மாதங்களுக்கான இந்த நிதி நிலை அறிக்கைக்கு ஆயிரத்து 765 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் 970 பில்லியன் ரூபாய் நிதி கடன் வட்டி மற்றும் தவணைக்கொடுப்பனவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த தொகையானது, மொத்த நிதிநிலை அறிக்கையின் 55 சதவீதமாக அமைந்துள்ளது.

அத்துடன், இந்த நிதிநிலை அறிக்கையின் ஊடாக 480 பில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.

மூலதன செலவுக்காக 310 பில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பாதீட்டை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

Related posts

தமிழர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது.

wpengine

மன்னார்-எருக்கலம்பிட்டியில் பகுதியில் மஞ்சள் கடத்தல்

wpengine

Editor