பிரதான செய்திகள்

ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை, பதவி அவசரமாக வழங்க வேண்டும்- அமீர் அலி

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையையும்,பதவி உயர்வையும் அவசரமாக வழங்க ஆவண செய்யுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு கீழே இருக்கின்ற பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் தங்களது பதவி உயர்வையும்,கடந்த கால சம்பள நிலுவையையும் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியியாக தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையையும்,பதவி உயர்வையும் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது, தேசிய பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களை மனதளவில் பாதிக்கின்ற விடயமாகும். எனவே மத்திய அரசுக்கு கீழே இயங்கும் தேசிய பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் விடயத்திலும் கரிசனை கொண்டு, அவர்களது உரிமையான அவர்களது பதவி உயர்வு,சம்பள நிலுவை ஆகியவற்றை விரைவில் பெற்றுக் கொடுங்கள்.

பிரதேசங்களில் கல்வி வளர்ச்சியிலும்,மாணவர்களின் இன்னோரன்ன விடயங்களிலும் தேசிய பாடசாலைகள், மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. எனவே இந்த விடயத்தில் உங்களது அதிகபட்சமான அவதானத்தை செலுத்தி மிக விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஆவன செய்யுங்கள். என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Related posts

இராஜாங்க அமைச்சில் இருந்து நீக்கப்பட்டவர் மீண்டும் அமைச்சராக நியமனம்

wpengine

பசில் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

wpengine

றிஷாட் உடனடியாக பதவி விலக வேண்டும்! ஆனந்த சாகர தேரர்

wpengine