Breaking
Fri. May 3rd, 2024

இன்று வடகிழக்கு இணைப்பா,பிரிப்பா என்பது பற்றி முஸ்லிம் மக்களிடத்திலும்,குறிப்பாக முஸ்லிம் அரசியல் வாதிகளிடத்திலும் ஒரு பேசும் பொருளாக மாறியிருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

இந்த வடகிழக்கு இணைப்பு பிரச்சினையில் சில அரசியல் கட்சி தலைவர்கள் வெளிபடையான கருத்துக்களை தெறிவித்து வரும் நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் சில கருத்துக்களை தலைவர் அஸ்ரப்கூறியதாக கூறிவருகின்றனர்.

வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக அஸ்ரப் அவர்களின் நிலைப்பாடு இதுதான் என்று இவர்கள் கூறி அவர்மேல் மக்களுக்கு இருக்கும் மதிப்பை பயன்படுத்தி,நாங்கள் கூறும் கருத்து தலைவர் அஸ்ரப்பின் கருத்து என்று கூறி இவர்களுடை தான்தோன்றித்தனமான கருத்தை மக்கள் மத்தியில் தினிக்கபார்க்கின்றார்களா என்று என்ன தோன்றுகின்றது.

வடகிழக்கு சம்பந்தமாக அஸ்ரப்பின் கொள்கை என்ன என்பதை நாம் விரிவாக ஆராய வேண்டும்.

1987ம் ஆண்டு ரஜீவ் ஜேஆர் ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுடைய என்னங்களுக்கு மாற்றமாக வடகிழக்கு இணைக்க பட்டபோது, அஸ்ரப் அவர்கள் கடுமையாக எதிர்த்தது மற்றுமன்றி இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களை சிறுபாண்மையிலும் சிறுபாண்மையாக மாற்றிவிட்டது என்று சாடியது மற்றும்மல்ல அன்று இருந்த முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களை பேசாமடைந்தைகள் என்றும் கூறியிருந்தார்.

அதன்காரணமாக இந்த ஒப்பந்தத்தை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறியிருந்தார்.

அந்த ஒப்பந்தத்தை பலப்படுத்தும் நோக்கத்தில் வடகிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த முற்பட்ட வேலை அஸ்ரப்பின் கட்சியினர் அதில் நாங்கள் போட்டியிட மாட்டோம், அதில் நாங்கள் போட்டியிட்டால் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதற்கு சமம் என்றாகிவிடும் என்ற காரணத்தால் கடைசிவரை எதிர்த்து வந்தவர்கள்,ஏதோ காரணத்தால் தேர்தல் விண்னப்ப திகதிக்கு முந்திய மூன்று நாற்களுக்குமுன் திடீர் என்று தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து, கொழும்பு பிரதேச நபர்களின் பெயரில் வடகிழக்கு மாகாணசபையில் போட்டியிடும் பெயர் பட்டியலை தாக்கல் செய்தார்கள்.

அந்த நபர்களின் பெயரிலே வடகிழக்கை சேர்ந்த நபர்களை டம்மியாக போட்டு தேர்தல் வேளையில் ஈடுபடுத்தி பதினேழு உறுப்பினர்களை பெற்றார்கள். அந்த தேர்தலில் எதிர்கட்சி தலைவராக சேகு இஸ்ஸடீன் அவர்கள் தெறிவு செய்யபட்டார்கள்.

அந்த தேர்தலில் போட்டி யிட்டதன் பின் வடகிழக்கு ஒப்பந்தத்தை எதிர்ப்பதை முஸ்லிம் காங்கிரஸ் தவிர்த்தே வந்தது.

அந்த தேர்தலின் பின் தமிழர்களுடை ஆயுத போராட்டம் உக்கிரம் அடைந்திருந்த நியைில்
வடகிழக்கை பிரித்து இன்னும் தமிழர்களை ஆத்திரமூட்ட முடியாது என்ற நிலையில் சிங்கள தலைமைகள் வடகிழக்கு பிரிப்பு என்ற விடயதை கதைப்பதற்கே விரும்பாமல் இருந்தார்கள்.

இந்த நேரத்தில் முஸ்லிம்களாகிய நாம் பிறிப்பதற்கு முயற்சித்தாலோ,அல்லது அது சம்பந்தமாக பேசினாலோ தமிழர்களும் முஸ்லிம்களும் தீராப் பகையாளியாகி விடுவோம் என்ற காரணத்தினால் அதனை பற்றி பேசியும் பயன் இல்லை என்று நினைத்தார்கள்.

அதன் பிறகு முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு ஈடான சில கோறிக்கைகளை முன்வைத்து வந்தது என்பது உண்மைதான் என்றிருந்தாலும்,கடைசிதீர்மானமாக இதைத்தான் தாருங்கள் என்று எங்கேயுமே கூறவில்லை.

அவர்கள் கோரிய முஸ்லிம் மாகாணசபை எப்படி அமையவேண்டும் என்று அவர்கள் கடைசிவரையும் கூறவில்லை.

இன்னோறு தீர்மானமாக இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணசபை வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள்.

இந்த மாகாணசபையின் தலைநகர் எங்கே அமையவேண்டும் அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதுக்கு அங்கே பதில் இல்லாமல் திண்டாடியதையும் நாம் அறியக்கூடியதாக இருந்தது.

அதே நேரம் கல்முனை கரையோர மாவட்டம் தறப்படவேண்டும் என்றும் ஒரு கோரிக்கை முன்வைக்கபட்டது.

(அந்த திட்டம் 1978ம் ஆண்டய மொரகொட ஆணைக்குளு தீர்மாணமாகும்)…

இப்படியான கோரிக்கைகளும்,திட்டங்களும்.இனிமேல் வடகிழக்கு பிரிக்கபடமாட்டாது என்ற என்னம் இருந்தபோதுதான் வைக்கபட்டது என்பதுதான் உண்மை என்பது பின்னால்வரும் விடயங்களை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

மேற்கூறிய என்ன தீர்வை அஸ்ரப் முன்வைத்தாலும் அவருடைய என்னத்தில் இருந்ததல்லாம் வடகிழக்கை பிரித்தால் ஒரு தீர்வும் தேவையில்லை,கிழக்கு பிரிந்திருந்தாலே போதும் என்ற என்னம்தான்…

அதை ஏன் நாங்கள் கூறுகின்றோம் என்றால்.

அஸ்ரப் அவர்கள் மரணிப்பதற்கு முன் சந்திரிக்காவுயை ஆட்சியில் தீர்வு திட்டத்தை தயாரிக்கும் பாக்கியத்தை பெற்றிருந்தார் என்பது எலாலோருக்கும் தெறிந்த விடயம்…

அதிலே 1997ம் ஆண்டு தீர்வு திட்டம் ஒன்று தயாரிக்கபட்டது,அதன் கதாநாயனே அஸ்ரப்தான் என்பது நமக்கு தெறியும்.

அந்த தீர்வு திட்டத்திலே,முஸ்லிம் மாகாணசபையோ,நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகணசபையோ அவர் கோரவில்லை.

அதில் அவர் கேட்டு இருப்பது என்னவென்றால்.
வடகிழக்கு நிரந்தரமாக இணையவேண்டும் என்றால் மட்டகிளப்பு மாவட்ட மக்களும்,திருகோணாமலை மாவட்ட மக்களுக்கும் வடக்கோடு இணைவதா? பிரிவதா.? என்ற வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும்,அவர்கள் பிரிவதாக வாக்களித்தால் கிழக்கு பிரிந்தே இருக்கவேண்டுமென்றும்,அவர்கள் ஒருவேளை(அது நடக்காது என்று அஸ்ரப்புக்கு தெறியும்,ஏனென்றால் அந்த இரண்டு மாவட்ட முஸ்லிம் மக்களும்,சிங்கள மக்களும்,குறைந்தளவான தமிழ் மக்களும் பிரிவதற்கே வாக்களிப்பார்கள்).என்பது எல்லோரும் அறிந்த விடயம்.

அந்த தீர்வு திட்டம் யூன்பியின் எதிர்ப்பால் தடைப்பட்டது.

அதன்பிறகு 2000ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி வைக்கப்பட்ட தீர்வு திட்டத்தில்.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த படவேண்டும்.(வடக்கோடு இணைவதா பிரிவதா என்று)..என்று கூறியது மட்டுமல்ல,

இந்த அரசியல் யாப்பு தொடங்கிய காலப்பகுதியிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்கு முந்தாமலும்.பத்து ஆண்டுகள் மூன்று மாதத்திற்கு பிந்தாமலும் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தபடவேண்டும்.

மேற்கூறிய காலப்பகுதி முடிவடையும் திகதிவரை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தபடாவிடில்,அத்திகதியிலிருந்து வடக்கு-கிழக்கு பிரிந்த பிராந்தியமாக கருதப்படும்..
வடக்கு தனி பிராந்தியம்,கிழக்கு தனி பிராந்தியம் என்று பிரிந்தே இருக்கும் என்பதே அந்த தீர்வில் குறிப்பிட பட்டுள்ளது.

இப்போது கூறுங்கள்..

அஸ்ரப் இந்த இரண்டு தீர்வு பொதியிலும் இணைந்த மாகாணத்தில் தீர்வு வேண்டும் என்று கூறியுள்ளாரா?

ஏன்என்றால் இந்த இரண்டு தீர்வு பொதிகளின் கதாநாயகனே அஸ்ரப்தான்.
அப்போது ஏன் இந்த தீர்வு பொதியில்,தென்கிழக்கு மாகாணம் என்றோ,நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்றோ,அவர் அங்கே ஒன்றுமே கூறவும் மில்லை,அதைபற்றி பேசவும் இல்லை..

அவர் கேட்டதல்லாம் வடக்கோடு கிழக்கு இணைவதாக இருந்தால் கிழக்கு மக்களிடம் கேட்கவேண்டும் என்பதே!

கிழக்கு மக்கள் என்னத்தை கேட்பார்கள் என்பது அஸ்ரப்புக்கு தெறியாமல் இல்லை…

ஆகவே தலைவர் அஸ்ரப்பின் என்னமெல்லாம் வடக்கும் கிழக்கும் பிரிந்தாலே போதும் என்பதே!

இதனை புரியாத சில பேர் அஸ்ரப் அதைகேட்டார்,இதைகேட்டார் என்று கதையளப்பது. அவர்களுடைய அறியாமையா? அல்லது இயலாமையா?

அல்லது மக்களின் அறியாமையை அஸ்ரப்பின் பெயரை பயன்படுத்தி தங்களுடைய சதி திட்டத்தை நிறைவேற்ற துடிக்கின்றார்களா?

என்பதை முஸ்லிம் மக்கள்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்?.?

கல்முனை
இப்றாஹிம் ஹாஜியார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *