பிரதான செய்திகள்

அரசாங்கத்தை வீழ்த்த இராணுத்தில் உள்ள சிலர் சதி -விக்ரமபாகு கருணாரத்ன

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக நாட்டுக்குள் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதற்கு இராணுவத்துக்குள் இருக்கும் பாஸிசவாத கொள்கையுடையவர்களும் துணையாக இருக்கின்றனர். இவர்களை கண்டறிய வேண்டும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் இன்று (24)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் பொய் வதந்திகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதி நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. இந்த சதித்திட்டங்களுக்குள் கடந்த அரசாங்கத்தில் இராணுவத்துக்குள் இருந்து பாஸிசவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும் இருக்கின்றனர். அவர்கள்தான் அரசாங்கத்துக்கு எதிரான சதி நடவடிக்கைகளுக்கு மறைந்திருந்து துணைபோகின்றனர்.

அத்துடன் கொஸ்கம சாலாவ இராணுவ ஆயுத களஞ்சியசாலை வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளிப்படவில்லை. இந்த சம்பவமும் சதி நடவடிக்கையாகவே இருக்கவேண்டும். அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயலா என்ற சந்தேகமும் தோன்றுகின்றது என அவர் தெரிவித்தார்.

Related posts

தாய்,மகன் படுகொலை! சந்தோக நபர் மூன்று பேர் கைது

wpengine

தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம்! ஜூலை 20 முதல் 30 வரை போதைப் பொருள் எதிர்ப்புப் பிரச்சாரம்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor