Breaking
Mon. May 13th, 2024

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புத்தளம் மாவட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு நேற்று முன் தினம் (01.05.2016) புத்தளம், கல்பிட்டி நகரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்ட தலைவர்              சகோ. பவ்சாத் தலைமையில் நடைபெற்றது.

இணைவைப்பில் மூழ்கியிருக்கும் மக்களை தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முயற்சியின் ஒரு அங்கமாக மாவட்ட ரீதியாக ஷிர்க் ஒழிப்பு மாநாடுகளை ஜமாஅத் நடத்தி வருகின்றது. நேற்று நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

  1. கல்பிட்டி அரச வைத்திசாலை சேவைகளை துரிதப்படுத்த வேண்டும்.

கல்பிட்டியில் இயங்கி வரும் அரச மருத்துவமனையில் போதுமான சிகிச்சைகள் இல்லாமையினால் சிறு சிறு நோய்களுக்கெல்லாம் புத்தளம் பெரிய வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. காலடியில் அரச வைத்தியசாலை ஒன்றிருந்தும் 45 கி.மீ க்கும் அதிகமான தூரம் நோயாளிகளை கொண்டு செல்ல வேண்டியிருப்பதினால் குறித்த நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் வைத்தியசாலை பணியாளர்களும் பாரிய சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இது விடயத்தில் அரசு அக்கரை செலுத்தி கல்பிட்டி அரச வைத்தியசாலையில் உள்ள குறைகளை கண்டறிந்து பணிகளை துரிதப்படுத்துமாரு இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது.

  1. பல்கலைக் கழகம், கல்விக் கல்லூரி நுழைவு சம்பந்தமாக

புத்தளம் மாவட்டத்தில் க.பொ.த. ச/த மற்றும் க.பொ.த. உ/த பரீட்சைகளில் சித்தியடைந்த அதிகமான மாவணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் கல்லூரிகளுக்கான வாய்ப்பை இழந்த நிலையில் தொழில் வாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கக் கூடிய நிலையை நாம் காண்கின்றோம். இதற்கு பிரதான காரணம் பல்கலைக் கழகம் மற்றும் கல்விக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணக்கை குறைவாக உள்ளதே ஆகும். எனவே இவர்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுத்தரும் பொருட்டு புத்தளம் மாவட்டத்தில் பல்கலைகழம் மற்றும் கல்விக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

புத்தளம் மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளில் மிகப்பெரும் சவாலாக உள்ளது போதைப் பொருள் பயன்பாடாகும். இதன் காரணமாக அதிகமான வாலிபர்கள் மற்றும்  பாடசாலை சிறார்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு மூல காரணமாக உள்ள போதைப் பொருள் வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என இம்மாநாடு அரசிடம் கோரிக்கை வைக்கிறது.

  1. போதைப் பொருள் எதிர்ப்பு பிரச்சாரம்

புத்தளம் மாவட்டத்தில் பரவலாக போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்து வருவதனால் அதை முற்றாக ஒழிக்கும் பொருட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் போதைப் பொருள் எதிர்ப்பு தீவிரப் பிரச்சாரம் இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் ஜூலை 20 முதல் 30 வரை புத்தளம் மாவட்டம் பூராக நடைபெரும் என்பதை இம்மாநாடு ஏகமானதாக தீர்மானிக்கிறது.

  1. “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்“ தொடர் முலக்கப் பிரச்சாரம்

முஸ்லிம்கள் எப்படி இணைவைப்பில் மூழ்கி தங்கள் வாழ்வை அழித்துக் கொள்கிறார்களோ அதே போல் நபிகளாரின் போதனைகளை மறந்து அதற்கு எதிரான ஏராலமான காரியங்களை செய்து வருகின்றனர். அதையும் சமுதாயத்திற்கு உணர்த்தும் விதமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தொடர்ந்து “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” எனும் தொனிப் பொருளில் நாடலாவிய ரீதியில் தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப் படும் என்பதையும் இம்மாநாட்டில் தெரிவித்துக் கொள்கிறோம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *