பிரதான செய்திகள்

அரச கட்டிடங்கள், மதஸ்தலங்களில் சோலர் நிறுவுவது குறித்து வெளியான தகவல்!

அரச கட்டிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய களங்கள் (Solar) நிறுவும் திட்டத்திற்கான 90% வீத ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் 100 மில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கல்லூரிகள், முப்படை கட்டிடங்கள், பொலிஸ் நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர அரச கட்டிடங்கள் ஆகியன தொடர்புடைய கணக்கெடுப்பின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 15ஆம் திகதி நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் சிறப்பு ரயில் சேவை..!

Maash

பிராய்லர் கோழியை சாப்பிடுகிறீர்களா? கல்லீரல், கிட்னி, ஆண்மை அவ்வளவு தான்!

wpengine

பேசித் தீர்க்க வேண்டும் தலைவரின் வேத வசனம்! ஏன் பஷிரை பேச விடவில்லை?

wpengine