Breaking
Tue. Apr 23rd, 2024

By: Fahmy Mohamed -UK


கடந்த ஐனாதிபதித் தேர்தலில் கோதபயா வெற்றி பெறுவார் என்று ஆதாரபூர்வமாக எழுதினேன். விமர்சித்த 99% மானவர்கள் பின்னர் தலைமீது கைவைத்தனர்.

இந்த முறை 2/3 கோதபயா அணிக்கு கிடைக்குமா? என்ற கேள்விக்கு, வெறுமனை கிழக்கு அரசியலில் ஒரே பார்வையுடன் இனவாதமாக இயங்கும் முகநூலை வைத்து பலரும் பழைய படத்தை ஒட்டுகின்றனர்.

மொத்தமாக 225 ஆசனங்கள் பாராளுமன்றத்தில்,113 பெரும்பான்மைக்கு அவசியம். 150 ஆசனங்கள்  2/3 பெரும்பான்மைக்கு அவசியமாகும்.

தற்போதைய பாராளுமன்றம் 19வது சட்டத்திருத்தம் மூலம் ஐனாதிபதியின் அதிகாரங்களை குறைத்துள்ளது. ஆகவே கோதபயா பலத்த ஏமாற்றத்தில் உள்ளார். இதற்காக எந்த விலை கொடுத்தேனும் 2/3 தேவையாக உள்ளது.

இதில் SLPP தனித்து 3/2 பெரும்பான்மை பெறமுடியாது என்பது அறிந்த விடயம்.இதனை ஐதேகட்சி, TNA,SLMC,ACMC, என பலமான கட்சிகளில் ஊடுறுவலை நடாத்தி உள்ளனர். வெறுமனே கிழக்கில் இனவாதம் பேசும் சிறுபான்மை அரசியலை வைத்து தேசிய அரசியலை அளவிட வேண்டாம்.

அந்தவகையில்  SLPP தனது கணிப்பீட்டில்:

1-SLPP-100-110
2-UNP-25-30
3-தொண்டமான்+ஆனந்தசங்கரி அணி+விக்கேஸ்வரன்+டக்ளஸ் அணி-3
4-தேசிய காங்கிரஸ்+ஹிஸ்புள்ளா+தென்பகுதி 6 சுயேட்சைகள்-2
5-TNA-15

இங்கே மேற்குறிப்பிட்ட சகலரும் பாராளுமன்றத்தில் TNA வெளியில் இருந்து ஆதரவைத் தவிர ஆளும் கட்சியாக இருப்பார்கள். இந்த அரசாங்கத்திற்கு மக்கள் தேசிய அணி என்று பெயரிடப்படலாம்.

1-SLPP தனித்தே பல இடங்களில் பலமான கட்சியாக போட்டி இடுகிறது.இதில் சுமார் 183 முன்னால் பாராளுமன்ற & மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள்,பிரபல்யமான சினிமா மற்றும் கல்விமான்களின் அமைப்பும் உள்ளது.சிங்கள கடும்போக்காளர்களின் பலமான பின்புல ஆதரவு உள்ளது.

2-UNP-இம்முறை சுமார் 62 முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், SLPPகட்சியில் இடம் வழங்கப்படாத 14 முன்னால் SLFPஉறுப்பினர்கள் மற்றும் 12 மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் போட்டி இடுகின்றனர்.மேல், தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணத்தில் சஜித் அணியுடன் பலமாக மோதுவார்கள். கொழும்பில் சஜித் மற்றும் ரணில் நேரடியாக மோதுகின்றனர்.

சஜித் அணியில் ACMC&SLMC வேட்பாளர்களை விட சொற்பமான முஸ்லீம் வேட்பாளர்கள் உள்ளனர். ரணில் அணியில் அதிகமான முஸ்லீம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

3-தொண்டமான் 3 மாவட்டங்களில் தனித்தும் டக்ளஸ் 3 மாவட்டங்களில் வடகிழக்கில் போட்டி இடுகின்றனர். இதில் தொண்டமான் 3 ஆசனமும், டக்ளஸின் யாழ்ப்பாண ஆசனமும் நிச்சயமானது.இதைவிட விக்னேஷ்வரன் அணி மற்றும் இதர தமிழ்கட்சி அணிகளிடம் இருந்து 0-1 ஆசனம் எதிர்பார்க்கப்படுகிறது.

4-அத்தாவுள்ளா மற்றும் ஹிஸ்புள்ளா அணி மூலம் குறைந்தது 2 ஆசனமும்,, தெற்கில் 3 மாவட்டங்களிலும் SLFP*UNP+JVP+ஆகிய கட்சிகளில் இடம் கிடைக்காத சகலரையும் உள்வாங்கிய குழு சுயேட்சையாக இறங்கி உள்ளது. இதில் மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டையில் 1-2 ஆசனம் எதிர்பார்க்கப்படுகிறது.

5-TNA கடந்த அரசாங்கத்தில் சகல வசதிகளையும் அனுபவித்தனர். 17 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுக்கான விடுதியை தவிர சகல வசதிகளும் வழங்கப்பட்டது. ஆகவே இவர்களால் சம்பளம் மட்டும் எடுக்கும் உறுப்பினர்களாக இருக்க முடியாது. அதிலும் வடகிழக்கில் அதிகமான கட்சிகள் உருவாகி உள்ளதால் எதிர்க்கட்சியாக இருப்பது கடினமாக இருக்கும். இதனால் சஜித் தோல்வி அடைந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கான இரகசிய வாய்மூல ஒப்புதலை மஹிந்த உடன் ஏற்படுத்த உள்ளனர்.

அதன்படி எதிர்க்கட்சியில் இருந்து 19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கு ஆதரவு வழங்க உள்ளனர். இதற்காக அரசியலமைப்பு சீர்சிருத்தம் மற்றும்  அபிவிருத்திக்காக வடகிழக்கு செயலனியை உருவாக்க உள்ளனர்.

இதைவிட முக்கியமாக மஹிந்த அணியில் வடகிழக்கில் பலமான முஸ்லீம் தலமைகள் இல்லை. ஆகவே தமிழ் மக்களுக்கான பலவிடயங்களை இயலுமானளவு கோதபயாவை அனுசரித்துப் போவதன் மூலம் சாதிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.

ஆகவே எனது கருத்தில் UNP இரண்டாக பிளவுபட்ட நிலையில், முஸ்லீம் தலமைகள் தனிமையாகி தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். சஜித் பலத்தை ரணிலுக்கு எதிராக் காட்டுவதற்கு SLMC& ACMC பழியாக்க் கூடாது.

கடந்த ஐனாதிபதித் தேர்தலின் பின்னர் UNPக்கான ஆதரவு, அதனால் சமூகம் எதிர்கொள்ளும் சவால் என்பது படிப்பினையாக உள்ளது. இதற்குள் மீண்டும் அதே குழியில் தானாகப் போய் வீழ்வதை சிந்தித்து இருக்க வேண்டும்.

சஜித் வெற்றி பெற்றால் மேற்குறிப்பிட்ட சகலதும் தலைகீழாக மாறும். ஆனால் தோல்வி கண்டால் வடகிழக்கு முஸ்லீம்களின் அபிவிருத்தி, பாதுகாப்பு, வேளைவாய்ப்பு என்பன கேள்விக் குறியாகும். வடக்கில் டக்ளஸ் கிழக்கில் கருணா, பிள்ளையான், மற்றும் TNA ஆதிக்கம் உச்ச நிலை அடையும். அம்பாறை மற்றும் திருகோணமலையில் சிங்கள இனவாதம் உதயமாகும்.

ஆதலால் கிழக்கில் SLPP அல்லது அவர்கள் சார்ந்த அணியின் முஸ்லீம் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது காலத்தின் தேவையாக உள்ளது.

ஆதலால் கடந்த ஐனாதிபதித் தேர்தலில் இனவாத்த்தை விதைத்து முஸ்லீம்களை தேசத்தின் எதிரிகளாகவும், மற்றைய சமூகத்தில் இருந்து தனிமையாக்கியது போன்று ,மீண்டும் கொண்டு போகவேண்டாம். மக்களால் தெரிவான ஐனாதிபதி இன்னும் 5 வருடத்திற்கு அதிகாரத்துடன் இருப்பார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *