பிரதான செய்திகள்

அமைச்சர் றிசாத்தை கேவலப்படுத்தியவர்கள் குற்றப்புலனாய்வில் மாட்டிக்கொண்டனர்

IPL சூதாட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்களை அமைச்சர் றிசாத் இழந்தார் எனவும், பலகோடி கறுப்புப் பணத்தை, வெளிநாட்டவர் ஒருவர் மூலம், வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றார் எனவும் போலி இணையத்தளங்கள் வாயிலாக செய்திகளை வெளியிட்ட சபான் சிராஜ், அபாம் சபீக் ஆகியோர் குற்றப்புலனாய்வில் வகையாக மாட்டிக்கொண்டனர்.

சவூதி அரேபியா, ரியாதில் பணிபுரியும் அக்கரைப்பற்று சபான் சிராஜ் என்பவரும், முஸ்லிம் காங்கிரசின் ஊடகப்பிரிவில் பணியாற்றும், பேருவளையைச் சேர்ந்த அபாம் சபீக் என்பவரும் அமைச்சர் றிசாத்தை வீழ்த்தும் நோக்கில் இவ்வாறான நாசகார வேலைகளை மேற்கொண்டுவரும் விடயம் ஆதாரங்களுடன் அகப்பட்டுள்ளது.

“விடியலைத் தேடி” என்ற போலி செய்திகளைப் பரப்பும் இணையத்தளத்தின் ஊடாகவும், இவர்களால் இயக்கப்படும் முகநூல்கள்   ஊடாகவும், வாட்ஸ்அப் குழுமங்கள் ஊடாகவும் இந்தப் போலியான பரப்புரைகளை மேற்கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரர், ரவூப் ஹசீரின் தலைமையில் இயங்கும், ஊடகக் குழுமம் ஒன்று இந்தச் செய்திகளை சரிபார்த்த பின்னரே, றிசாத்துக்கு எதிரான கேவலமான கருத்துகளும், செய்திகளும் பரப்பப்பட்டு வருவதாக புலனாய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

சிரேஷ்ட குற்றவியல் சட்டத்தரணி ஒருவர்,  சபான் சிராஜ், அபாம் சபீக் ஆகியோருக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து, குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் இது தொடர்பான ஆவணங்களையும், ஆதாரங்களையும் சமர்பித்துள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.unnamed (4)

சவூதியில் இருக்கும் சபான் சிராஜுக்கு நீதியமைச்சு, வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் ஊடாக அழைப்பாணை மேற்கொள்வதற்கான, ஆவணப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த இரண்டு நபர்களின் பல்வேறுபட்ட செயற்பாடுகளை தொழில்நுட்ப வல்லுனர்கள் Trace பண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.    unnamed (5)

Related posts

யாழ்ப்பாணத்தில் 1729பேர் தனிமைப்படுத்துள்ளார்கள்

wpengine

பொதுஜன பெரமுனவுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்

wpengine

யாழ் இரவோடு இரவாக முளைத்த சிவலிங்கம்

wpengine