பிரதான செய்திகள்

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் 69வது மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா பயணம்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் 69வது மாநில மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று அதிகாலை இந்தியா பயணமானார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 69-வது நிறுவன தினமான இன்று (மார்ச் 10 வியாழக்கிழமை), விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நடைபெறுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய மாநாடு 2016.03.19 ஆந் திகதி பாலமுனை பிரமாண்டமான முறையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயமாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ளுமாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 69–வது நிறுவன தினமான மார்ச் 10–ந் தேதி (இன்று), விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநில தலைவர் ஹைதர் அலி ஷிஹாப் தலைமை தாங்குகிறார். இலங்கை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

மாலை 6.30 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் மாநாடு கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

மாநாட்டில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் எம்.பி., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

Related posts

கல்பிட்டி-எத்தாலை முஸ்பர் மசூத் இளைளுனை காணவில்லை

wpengine

அமைச்சர் றிஷாட் முசலி பிரதேசத்திற்கு செய்த சில சேவைகள்

wpengine

இஸ்­லாத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஊர்­வ­லம்! காரால் அடித்து கொலை (வீடியோ)

wpengine