பிரதான செய்திகள்

அமீர் அலி அரச காணி விவகாரம்! பதில் சொல்லுவாரா?

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
ஓட்டமாவடி பிரதேசத்தின் தியாவட்டவான், ஹிஜ்ரா நகர் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை பிரதியமைச்சர் எம்.எஸ். எம். அமீர் அலி அவர்களின் அமீர் அலி பவுண்டேசனுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கௌரவ பிரதியமைச்சர் அமீர் அவர்கள் தன்னிலை விளக்கத்தை மக்களுக்கு வழங்குவது சிறந்தது என நான் நம்புகிறேன்.

குறித்த 20 ஏக்கர் காணியில் தொழில்நுடபக் கல்லூரி ஒன்றை அல்லது விளையாட்டு மைதானத்தை அமைப்பது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது.

இந்த நிலையில், பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள், இந்தக் காணியில் அமீர் அலி பவுண்டேசன் என்ற அமைப்பின் மூலம் “செரண்டிப் கெம்பஸ்” என்ற நிறுவனத்தை நிர்மாணிப்பதற்கு குத்தகை அடிப்படையில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உத்தியோகபூர்மாக வேண்டுகோள் விடுத்திருந்தார் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த காணியை அமீர் அலி பவுண்டேசனுக்கு வழங்குவதற்கான அனுமதிக்கு மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் குழு சிபார்சு செய்துள்ளதாக வாழைச்சேனை, கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா உத்தியோகபூர்வமாக அமீர் அலி பவுண்டேசனுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். (குறித்த கடிதம் மேலே உள்ளது)

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு சில தினங்களின் பின்னரான 2-10-2010 இல்தான் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க குறித்த காணியில் அமீர் அலி பவுண்டேசன் “செரண்டிப் கெம்பஸ்“ என்ற நிறுவனத்தை நிர்மாணிக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் இந்த அர காணியை தனி நபராக அவர் சுவீகரிப்பதற்கான முயற்சியாகவே இதனைக் கருத முடியும் என்றும் பலரும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அமீர் அலி பவுண்டேசன் அமைப்பின் நிர்வாகத்தில் உள்ள அனைவரும் ஒரே குடும்ப (அமீர் அலி) உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டும் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதியைமச்சர் அமீர் அலி தெளிவுபடுத்துவது சிறந்தது என நினைக்கிறேன்.

Related posts

உயிரிழந்துவிட்டோமா, இல்லையா என்பதை அறிவதற்காகவா வந்தீர்கள் அமைச்சர் ஹக்கீம் ஆவேசம் (வீடியோ)

wpengine

டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதிய விளாமிடிர் புட்டின்

wpengine

தோட்ட தொழிலாளர் விடயத்தில் ரணிலின் நரித்தந்திரத்தை காணமுடியும்

wpengine