விளையாட்டு

அநுராதபுரம் ஸாஹிரா பாடசாலையில் அமைச்சர் ஹக்கீமால் திறந்து வைக்கப்பட உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம்

வடமத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரஷ்ட உப தலைவருமான அல்ஹாஜ் இராவுத்தர் நெய்னா முஹம்மத்தின் சிபாரிசின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின்  நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ள அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்துக்கு நீர் சுத்திகரிப்பு நிகழ்ச்சி திட்டத்துக்கு இன்று (20) இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்களில் ஒருவரும், அநுராதபுரத்தின் மூத்த ஆசிரியையுமான ஹாஜியானி என்.ஆர்.தாஜுதீன் அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் அமைச்சர் அல்ஹாஜ் ரவூப்  ஹக்கீம் இப்பாடசாலைக்கு விஜயம் செய்த போது பாடசாலை அதிபர் எம்.கே.எம்.ஜாபர் விடுத்த கோரிக்கையை அடுத்து பொன்விழா நிகழ்வின் ஒரு செயல் திட்டமாக இந்த விடயம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தானியர்களே !! உங்களை உளமாற வாழ்த்துகிறேன்.

wpengine

இங்கிலாந்துக்கு வெற்றி – தொடரையும் கைப்பற்றியது

wpengine

மீண்டும் நலமுடன் களத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை!

wpengine