Breaking
Sat. May 4th, 2024

தடகள தங்க மகன், உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டவீரர் உசேன் போல்ட் தனது ஓட்ட வாழ்க்கை வரலாற்றில் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டியின்  100 மீற்றர் இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

 

உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் நேற்று லண்­டனில் ஆரம்­ப­மா­கின்­றன. உலகின் அதி­க­வேக மனிதன் என்று வர்­ணிக்­கப்­படும் உசைன் போல்ட் மற்றும் மரதன் சம்­பியன் மோ பரா ஆகியோர் இந்தத் தொட­ருடன் தமது தட­கள வாழ்க்­கை­யி­லி­ருந்து ஓய்வு பெறு­கின்­றனர்.

லண்டனில் நடைபெற்றுவரும் உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டி 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 9.95 நொடிகளில் எல்லையை கடந்து உசேன் போல்ட் சாதனையை நிகழ்த்திய அதே மைதானத்தில் 100 மீட்டர் ஓட்டம் பிரிவின் இறுதிப் போட்டி  நடைபெற்றது. இதில் இப்போட்டியோடு தனது ஓய்வு பெறப்போவதாக அறிவித்த உசேன் போல்ட் பங்கேற்றார்.

இப்போட்டியில் அமெரிக்க தடகள வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.92 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அமெரிக்க வீரர் க்றிஸ்டியன் கோல்மேன் 9.94 வினாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். தனது இறுதி போட்டியில் தங்கம் வெல்வார் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த போல்ட் 9.95 நொடிகளில் எல்லையை கடந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற இருக்கும் 4×100 தொடர் ஓட்டப்போட்டி தான் போல்ட்டின் கடைசி போட்டி என்றாலும், தனிநபர் பிரிவில் இதுதான் அவருக்கு கடைசிப்போட்டியாகும்.

அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2005ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பதும், தனது கேரியரில் இரண்டு முறை ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக தடை செயப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிவுகள்:

1. ஜஸ்டின் கேட்லின் (அமெரிக்கா) 9.92 வினாடிகள்

2. க்றிஸ்டியன் கோல்மேன் (அமெரிக்கா) 9.94 வினாடிகள்

3. உசேன் போல்ட் (ஜமைக்கா) 9.95 வினாடிகள்

4. யோகன் ப்ளேக் (ஜமைக்கா) 9.99 வினாடிகள்

5. அகனி சிம்பைன் (தென்னாப்பிரிக்கா) 10.01 வினாடிகள்

6. ஜிம்மி விகார் (பிரான்ஸ்) 10.08 வினாடிகள்

7. ரீஸ் ப்ரெஸ்காட் (ப்ரிட்டன்) 10.17 வினாடிகள்

8. சு பிங்டியன் (சீனா)10.27 வினாடிகள்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *