பிரதான செய்திகள்

அக்கறைப்பற்றில் 375 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய அமைச்சர் றிஷாட்

-ஊடகப் பிரிவு-

அக்கறைப்பற்றில் 375 குடும்பங்களுக்கு 8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு இன்று 31.03.2019 அமைப்பாளர் நபீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு தேசிய தொழில் முயற்ச்சி அபிவிருத்தி அதிகாரசபையின் (NEDA) தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும், அ.இ.ம.கா பிரதித் தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப்பின் பூரண நெறிப்படுத்தலில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில் வணிக நீண்ட கால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டார்.

விசேஷட அதிதியாக விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இங்கு அக்கறைப்பற்று உலமா சபைக்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கு 2 மில்லியன் நிதிக்கான கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் , பாராளுமன்ற உறுப்பினர் S.M.M.இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் , கட்சியின் பொதுச் செயலாளர் சுபைதீன், பிரதேச செயலாளர் மற்றும் கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

இலங்கை முஸ்லிம்கள் குறித்து ஜெனிவாவில் முறைப்பாடு

wpengine

யானை, மனித மோதல் மிகவும் உக்கிரமடைந்த நிலையில் பொன்சேகா

wpengine

பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்ஷவினால் ரணிலுக்கு உறுதி

wpengine