Breaking
Fri. Apr 26th, 2024

(அபூ செய்னப்)

இன்றைய பெண்கள் செயற்திறன் மிக்கவர்கள்,இப்போது பெண்களின் குரல் தேசியத்திலும் சர்வதேசத்திலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. வெறுமனே வீட்டுக்குள் அடைபட்டு நாலுசுவருக்குள் பெண்கள் வாழ்ந்த காலம் மலை ஏறிவிட்டது.இன்று அரசியலிலும் பெண்களின் வகிபாகம் பற்றி பேசப்படுகின்றன என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு     மாவடிச்சேனை பெண் முயற்சியாளர் சமூக நல அமைப்பினரால் மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தில் மகளிர் அமைப்பின்  தலைவி ஏ.எல்.லத்தீபா அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகளிர் தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

தற்காலப்பெண்கள் மிகுந்த வீரியமிக்கவர்கள்,வாழ்க்கையில் ஏற்படுகின்ற சவால்களை தனித்து நின்று முகம் கொடுத்து வெற்றிபெறும் வல்லமைமிக்கவர்கள். ஒரு நல்ல சமூக கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய பொறுப்பை இறைவன் பெண்களிடமே தந்துள்ளான் எனவே நீங்கள் உங்கள் பிள்ளைகள் விடயத்திலும்,அவர்களின் செயற்பாடுகள் விடயத்திலும் அக்கறையும்,ஈடுபாடும் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.51f1bf11-4f97-4d6e-97fd-912a346b1d60
உங்கள் பிள்ளை எங்கே செல்கிறது,யாருடன் பழக்கம் வைத்துள்ளது,கூடாத சமூக அங்கீகாரம் அற்ற செயல்பாடுகளில் பிள்ளை ஈடுபடுகின்றதா? போன்ற விடயங்களில் மிக அவமானமாக இருக்க வேண்டும். இன்று சிறுவர்களை வழி கெடுக்கின்ற வகையில் பல்வேறு நாசகார வேலைகள் நடைபெறுகின்றன. வெறுமனே பணத்தை நோக்காக கொண்டு செயற்படுகின்ற ஒரு தரப்பினர் இளம் வாலிபர்களை போதைக்கு அடிமையாக்கி பணம் சம்பாதித்து வருகின்றார்கள் இந்த நிலையை மாற்றுகின்ற சக்தி பெண்களிடமே உள்ளது.
பிள்ளைகளின் கல்வி விடயத்தில் முக்கியத்துவம் கொடுங்கள்,அவர்களை சாதனையாளர்களாக மாற்றும் சாதனைப்பெண்களாக நீங்கள் மாற்றவேண்டும் , இப்போது பெண்கள் தொடர்பில் அரசும் பல நல்ல திட்டங்களை முன் மொழிந்து உள்ளது.அவைகள் பெண்கள் சுயகெளரவத்துடனும்,தன்நம்பிக்கையுடனும் வாழ அவர்களுக்கு வழிசெய்யும் என அவர் கூறினார்.3ff7cfbc-ae05-4f56-b9a8-e49d5611048e

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பெருளாதார அலுவல்கள பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களும் .கௌரவ அதிதிகளாக ஆர்.சிவபிரகாசம்(ஐ.எல்.ஓ நிறுவன பணிப்பாளர் மற்றும் ஆர்.றாயப்பு ஐயா மாவட்ட கூட்றவு தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.விசேட அதிதிகளாக ஏ.எல்.எம்.மன்சூர் (கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.ப.ம.பிரதேச செயலகம்), ஏ.எல்.எம்.ஜௌபர்(கிராம சேவகர்),ஜனாப் ஏ.எம்.எம்.அலியார்        (சமூக சேவை உத்தியோகத்தர் கோ.ப.ம.பிரதேச   செயலகம்),எம்.ஜி.அல்பத்தாஹ்              (முன்னால் பிரதேச சபை உறுப்பினர்), அஸ்ரப் மன்பாஇ (தபால் அதிபர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கணவனை இழந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்த விதவைகளுக்கு உலர் உணவுகளும் வழங்கிவைக்கப்பட்டன.கௌரவ அமைச்சர் அமீர் அலி அவர்கள் பொன்னாடை போர்த்தி  மகளிர் சங்கம் சார்பாக கௌரவிக்கப்பட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *