Breaking
Sat. May 4th, 2024

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் தீவிரமடைந்த வன்முறை சம்பவங்களை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் முதல் தற்போது வரையில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக். வட்ஸ்அப், வைபர் உள்ளிட்டவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த நடவடிக்கை உலகளாவிய ரீதியாக சாதனையாக பதிவாகி உள்ளது.
இணையப் பயன்பாடு காரணமாக இரு சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. அதில் முதலாவது சாதனை, ஒரே நாளில் வெளிநாட்டு இணைய முகவரி (IP) பயன்படுத்தி சமூக வலைத்தளங்களுக்கு சென்றமை மற்றும் கூகிள் ஊடாக VPN (Virtual Private Network) என்ற செயலியை அதிக முறை பதிவிறக்கம் செய்த நாடாக இலங்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களில6் கூகிளிலின் பிரபலமானவைகள் ஊடாக (Google Trends) மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நாட்களில் Porn என பயன்படுத்தப்பட்ட வார்தை அளவு VPN என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

VPN மற்றும் Google என்ற வார்த்தை சமமான அளவு கூகிளின் பிரபலமானவைகள் ஊடாக (Google Trends) பயணித்துள்ளது.
அத்துடன் இணையத்தளத்தை பயன்படுத்துபவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் VPN (Virtual Private Network) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அண்மைய காலமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த இணையத்தளங்களும் இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்கள் 72 மணித்தியாளங்கள் முடக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஊடக பிரிவினால் ஜனாதிபதியின் செய்தி ஒன்று அவரது பேஸ்புக் பக்கத்தில் இணைக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தும் விடயமாகியுள்ளது.
சமூக வலைத்தள முடக்கப்பட்டமையினால் கண்டி மாவட்டத்தின் வன்முறை குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் கூறிய விடயம் நகைச்சுவையானது என சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இவ்வாறு சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் எந்த ஒரு பயனும் இல்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளமையினால் இவ்வாறு முடக்கப்படுவதில் எவ்வித பயனும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *