பிரதான செய்திகள்

#Update ஹக்கீம் ,பைஸலுக்கு மத்திய மாகாண சபையில் கடும் எதிர்ப்பு!

(ஜே.எம்.ஹபீஸ் )

அமைச்சர் ஹக்கீம் மற்றும் சுகா­தாரத் துறை பிர­தி­ய­மைச்சர் பைஸல் காசி­முக்கு மத்­திய மாகாண சபையில் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது. 

இதே­வேளை, ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு உறுப்­பி­ன­ரொ­ருவர் செங்­கோலை எடுத்துச் சென்­ற­மையால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. இதனால், மத்­திய மாகாண சபையின் நேற்­றைய அமர்­வுகள் வெறும் 20 நிமி­டங்­க­ளுடன் நிறை­வ­டைந்­தது.

அத்­துடன் மத்­திய மாகாண சபை நட­வ­டிக்­கைகள் எதிர்­வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

சுகா­தார அமைச்­சினால் மத்­திய மாகா­ணத்தில் மேற்­கொள்­ளப்­பட உள்ள அபி­வி­ருத்திப் பணிகள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டலை நடத்­தி­ய­வர்கள் மாகாண சுகா­தார அமைச்­ச­ருக்கு அறி­விக்க வில்லை என்ற விட­யமே சூடு பிடித்து செங்கோல் தூக்கிச் செல்­லப்­பட்­டது.

இது பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது-
சுகா­தா­ரத்­துறை பிரதி அமைச்சர் பைசல் காசிம் மற்றும்  நகர நிர்­மாண நீர்­வ­ழங்கல் அமைச்சர் றவூப் ஹகீம் ஆகி­யோ­ர் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை கண்டி, மத்­திய மாகாண சுகா­தார அமைச்சில் ஒரு கலந்­து­ரை­யா­டலை நடத்­தினார்கள்.

அதில், மாகாண சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் டாக்டர் திரு­மதி. சாந்தி சம­ர­சிங்க மற்றும் வைத்­தி­ய­சா­லை­களின் மாவட்ட வைத்­திய அதி­கா­ரிகள், ஏனைய உயர் அதி­கா­ரிகள், அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் பிரத்­தி­யேக செய­லாளர் எம்.நயி­முல்லாஹ் உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது, கட்­டு­கஸ்­தோட்டை, தெல்­தோட்டை, கல­கெ­தர, அக்­கு­றணை ஆகிய மாவட்ட வைத்­திய சாலைகள் உட்­பட தம்­புள்ளை மற்றும் ரிக்­கி­ல­கஸ்­கட ஆதா­ர­வைத்­திய சாலை என்­ப­வற்றின் புதிய கட்­டிட வச­திகள், புனர் நிர்­மாணம், உட்­கட்­ட­மைப்பு வச­திகள், மருத்­துவ உப­க­ர­ணங்­களின் தேவை, தாதிமார் நிய­மனம் என்­பன தொடர்பில் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

இவற்­றிற்­காக 1500 மில்­லியன் ரூபாய்­களை ஒதுக்­கு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் மாகாண சுகா­தார அமைச்­சரின் அனு­ம­தி­யின்­றியே மேற்­படி கூட்டம் நடத்­தப்­பட்­ட­தா­கவும் தான் அமைச்­சுக்குச் சென்­ற­போது சுமார் 20 வாகனங்கள் அளவில் நிறுத்­தி­வைக்­கப்­ப­ட்­டி­ருந்­த­தா­கவும் அதன் போதே தனக்கு இவ்­வி­டயம் தெரிய வந்­தது என்றும் நேற்­றைய தினம் இடம்­பெற்ற மத்­திய மாகாண சபை அமர்­வின்­போது சபையில் மத்­திய மாகாண சுகா­தார அமைச்சர் பந்­துல யாலே­கம சுட்­டிக்­காட்­டினார்.

இது சபை­யை­யையும் மாகாண அமைச்­சையும் அவ­ம­திக்கும் செயல் என அவர் தனது கண்­ட­னத்­தையும் வெ ளியிட்டார்.

அவ்­வ­மயம் சபைக்கு சபைத் தலைவர் எல்.டி.நிம­ல­சிறி தலை­மை­தாங்கிக் கொண்­டி­ருந்தார். குறுக்­கிட்ட முன்னாள் மாகாண விவ­சாய அமைச்­சரும் சுதந்­திர ஐக்­கிய முன்­னணி(விமல் வீர­வன்ச அணி) அங்­கத்­த­வ­ரு­மான நிமல் பிய­திஸ்ஸ மேற்­படி விடயம் பாரதூ­ர­மான உரிமை மீறலாகும் என்று உரத்த குரலில் பேசிக்­கொண்­டி­ருந்தார்.

அப்­போது சபைத்­த­லைவர்  இது தொடர்­பாக தான் அறிக்கை ஒன்றைத் தரும் வரை பொறு­மை­யாக இருக்கும் படி கேட்­டுக்­கொண்டார்.

இருப்­பினும் நிமல் பிய­திஸ்ஸ உரத்த குரலில் தாம் சபையை பகிஷ்­க­ரித்து வெளி­யே­று­வ­தாகக் கூறி­வெ­ளி­யே­றினார். அவரைத் தொடர்ந்து இன்னும் ஐந்து பேர் அளவில் வெளி­யே­றினர்.

அப்­போது சபையில் வீற்­றி­ருந்த ஐ.ம.சு.கூட்­டணி அங்­கத்­தவர் திலக் ராஜ­பக்ஷ செங்­கோலைத் தூக்கிக் கொண்டு அவரும் வெளி­யே­றினார். சபை ஊழி­யர்­களும் சபைச் செய­லா­ளரும் பின் தொடர்ந்து சென்று செங்­கோலைக் கைப்­பற்­றினர்.

பின்னர் அங்கு உரை­யாற்­றிய விளை­யாட்­டுத்­துறை இளைஞர் விவ­கார அமைச்சர் பிர­மித்த பண்­டார தென்­னகோன் மாத்­தளை மாவட்­டத்தில் இது­போன்று விளை­யாட்­டுத்­து­றை­யுடன் தொடர்­பு­டைய  ஒரு சம்­ப­வமும் நடந்­தது. நான் விளை­யாட்­டுத்­துறை மாகாண அமைச்­ச­ரான போதும் எனக்குத் தெரி­யாமல் இப்­ப­டி­யான விட­யங்கள் மாத்­த­ளை­யிலும் முன்னர் நடந்­துள்­ளன. எனவே இது தொடர்பாக மத்­திய அர­சுக்கு அறி­விக்க வேண்டும் எனக் கூறிய போது சபையில் சல­சப்பு ஏற்­பட்­டது.

உடனே மு.ப. 10.20 இருந்து 10.40 வரை சபை நட­வ­டிக்­கை­களை தற்­கா­லி­க­மாக ஒத்­தி­வைப்­ப­தாக முதல்வர் அறி­வித்­ததும் 20 நிமி­டங்கள் கூடிய சபை கலைந்து சென்­றது.

பின்னர் மு.ப.11 மணிக்கு சபை மீண்டும் கூடிய போது மாகாண போக்­கு­வ­ரத்து அமைச்சர் எதி­ரி­வீர வீர­வர்­தன இப்­பி­ரச்­சினை தொடர்­பாக சபை நட­வ­டிக்­கை­களை ஒத்­தி­வைக்க வேண்டும் எனப் பிரே­ரித்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட சபை முதல்வர்  அடுத்த அமர்வை ஜூலை மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இது இவ்வாறிருக்க மத்திய மாகாண சபை சுகாதார அமைச்சர் பந்துல யாலேகம இது குறித்து மத்திய மாகாண ஆளுநர் திருமதி துலூகா ஏக்கநாயக்கவிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து இவ்விவகாரம் குறித்த முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கண்டி மாவட்ட சுகாதார பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

றிஷாதை இகழ ஹக்கீமின் அங்கீகாரத்துடன் ஒரு அணி களமிறக்கம் பல இணையதளம்,முகநுால்

wpengine

பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண ஆளுநராக நியமனம்

wpengine

அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.

wpengine